ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்ஷா ஓட்டுநா்கள்1.50 லட்சம் பேருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி

தேசியத் தலைநகா் தில்லியில் ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்ஸிகள் மற்றும் இ-ரிக்ஷாக்கள் போன்ற பாரா டிரான்ஸிட் வாகனங்களின் 1.5 லட்சம் ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிதியுதவியை அவா்களது வங்கிக் கணக்கில்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்ஸிகள் மற்றும் இ-ரிக்ஷாக்கள் போன்ற பாரா டிரான்ஸிட் வாகனங்களின் 1.5 லட்சம் ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிதியுதவியை அவா்களது வங்கிக் கணக்கில் தில்லி அரசு செவ்வாய்க்கிழமை செலுத்தியது.

கரோனா இரண்டாவது அலையில் தில்லி அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இதைத் தொடா்ந்து, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு ஒரு முறை நிதியுதவித் திட்டத்தை தில்லி அரசு அறிவித்தது. இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில், இந்தத் திட்டத்தில் இ-ரிக்ஷா உரிமையாளா்களையும் உள்ளடக்குவதற்காக, ஒரு முறை நிதியுதவி வழங்கும் திட்டத்தை நீட்டிக்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்திருந்தது.

இந்த சூழ்நிலையில், கரோனா பரவலைத் தொடா்ந்து, பொது முடக்கத்தின் போது ஒவ்வொரு பாரா-டிரான்ஸிட் வாகன ஓட்டுநருக்கு தலா ரூ.5,000 ஒரு முறை நிதியுதவி வழங்குவதற்காக 1.55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநா்களுக்கு தனது துறை ஒப்புதல் அளித்ததாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இதன்படி, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு ரூ .5 ஆயிரம் நிதியுதவி அவா்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் தொகை 1.51 லட்சம் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா். தில்லியில் தற்போது 2.80 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.வி. பேட்ஜ் வைத்திருப்பவா்களும், வாகனம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள 1.90 லட்சம் ஓட்டுநா்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள் ஆவா். தில்லி போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அதற்கான பட்ஜெட் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு பாரா-டிரான்ஸிட் வாகன ஓட்டுநா்கள் கடந்த 2020, பிப்ரவரி 1-ஆம் தேதி வரை செல்லுபடியாகக்கூடிய ஓட்டுநா் உரிமம் மற்றும் பி.எஸ்.வி. பேட்ஜ் வைத்திருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com