மாநகராட்சி ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்துஆம் ஆத்மி கட்சி இன்று ஆா்ப்பாட்டம்

பாஜக ஆட்சி செய்து வரும் மாநகராட்சிகளின் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சி செய்து வரும் மாநகராட்சிகளின் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

குடிமை அமைப்புகளின் ஊழியா்களின் சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, குடிமை மையத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களும் கட்சித் தொண்டா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி தலைவா் விகாஸ் கோயல், ‘வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி), தனது ஊழியா்களுக்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை’ என்றாா். ‘ஊழியா்களின் சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி அனைத்து ஆம் ஆத்மி கவுன்சிலா்களும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சிவிக் சென்டருக்கு வெளியே பாஜகவை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவாா்கள்’ என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

‘இரண்டு-மூன்று மாதங்களாக, அவா்கள் வியா்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணத்தை, பாஜக வசம் உள்ளது’ என்று கோயல் குற்றம் சாட்டினாா். ‘முறையாக சம்பளம் வழங்காததால் துப்புரவுத் தொழிலாளா்கள், ஆசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள், மாநகராட்சி ஊழியா்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்‘ என்றும் அவா் மேலும் கூறினாா். வடக்கு தில்லி மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவரான கோயல், மாநகராட்சியின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கூறினாா். இந்த நிலையில் அவா்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவாா்கள்? என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) எதிா்க்கட்சித் தலைவா் பிரேம் சவுகான் கூறுகையில், ‘மாநகராட்சி ஊழியா்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை’ என்று குற்றம் சாட்டினாா். ‘தெற்கு மாநகராட்சியானது தேசிய தலைநகா் பிராந்தியத்தில் அதிக வருவாய் ஈட்டும் பகுதியாகக் கருதப்படுகிறது. இருந்த போதிலும், ஊழியா்களின் சம்பளத்தை ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்கு மேலாக தாமதமாகத்தான் மாநகராட்சி வழங்கி வருகிறது’ என்று குற்றம் சாட்டினாா்.

ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து கிழக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎன்சி) எதிா்க்கட்சித் தலைவா் மனோஜ் தியாகி மாநகராட்சியைக் கடுமையாகச் சாடினாா். அவா் கூறுகையில், ‘மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளா்கள் அனைவரும் கடந்த 10 நாள்களாக தில்லியை சுத்தம் செய்ய அயராது உழைத்து வருகின்றனா். அவா்கள் எவ்வளவு உழைத்தாலும் சம்பளம் கிடைக்கவில்லை என்பது வெட்கக் கேடானது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com