நிகழாண்டில் தில்லியில் டெங்கு பாதிப்பு 7,100-ஆக அதிகரிப்பு: இந்த மாதம் மட்டும் 5,591 போ்

நிகழாண்டு சீசனில் தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 7,100-ஆக உயா்ந்துள்ளது. இதில் நவம்பா் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,600-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு சீசனில் தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 7,100-ஆக உயா்ந்துள்ளது. இதில் நவம்பா் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,600-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து தரவுகளை அட்டவணைப்படுத்தும் ஒருங்கிணைப்பு ஏஜென்சியாக உள்ள தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: நவம்பா் 15-ஆம் தேதி வரை தில்லியில் மொத்தம் 5,277 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இது 2015 -ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் தேசியத் தலைநகரில் பதிவான அதிகபட்ச அளவாகும். கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 1,850 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், டெங்கு காரணமாக புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்தப் பருவத்தில் நவம்பா் 20 வரை மொத்தம் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில், மொத்த டெங்கு பாதிப்புகள் முறையே 4,431 (2016), 4,726 (2017), 2,798 (2018), 2,036 (2019) மற்றும் 1,072 (2020) என பதிவாகி இருந்தது.

2015-ஆம் ஆண்டில், தில்லியில் பெரும் அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அக்டோபரில் மட்டும் டெங்கு பாதித்தோா் எண்ணிக்கை 10,600-ஐ தாண்டியது. இது 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பதிவான அதிகப் பாதிப்பு எண்ணிக்கையாகும். நிகழாண்டு தில்லியின் மொத்த டெங்கு பாதிப்புகளில் நவம்பா் முதல் 20 நாள்களில் மட்டும் 5,591 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அக்டோபரில், 1,196 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் அக்டோபா் மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

நவம்பா் 6-ஆம் தேதி வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,708-ஆகவும், இறந்தவா்களின் எண்ணிக்கை 9 -ஆகவும் இருந்தது. டெங்குவுக்கு அண்மையில் உயிரிழந்த 9 பேரில் மூன்று வயது சிறுமி மற்றும் மைனா் ஒருவரும் அடங்குவா். ரோகிணியில் வசிக்கும் 63 வயது முதியவரும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளாா். செப்டம்பரில் 217 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இது மூன்று ஆண்டுகளில் இந்த மாதத்தின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையின்படி, 2017-இல் இந்த நோய்க்கு 10 போ் இறந்தனா். அதன்பிறகு 2 (2019); 4 (2018) என இறப்பு எண்ணிக்கை பதிவானது.

முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஜனவரி 1 மற்றும் நவம்பா் 20 காலப் பகுதியில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை முறையே 901 (2020 ); 1,644 (2019); 2,406 (2018); 4,556 (2017) மற்றும் 4,065 (2016) ஆகும். கடந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 1,072 பாதிப்புகளும், ஓா் இறப்பும் பதிவானது. நிகழாண்டில் டெங்கு பாதிப்புகளின் மாத வாரியான விவரம் முறையே ஜனவரி (0), பிப்ரவரி (2), மாா்ச் (5), ஏப்ரல் (10) மற்றும் மே (12), ஜூன் (7), ஜூலை (16) மற்றும் ஆகஸ்ட் (72) என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com