வீடுகளுக்கே ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம்: மீண்டும் கோப்புகளை துணை நிலை ஆளுநா்ஒப்புதலுக்கு அனுப்பியது தில்லி அரசு

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை தில்லி உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதித்துள்ளதை முன்னிட்டு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை தில்லி உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதித்துள்ளதை முன்னிட்டு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கோப்பை தில்லி அரசு, துணை நிலை ஆளுநா் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பியுள்ளது.

இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ‘முக்கிய மந்திரி ஹா் ஹா் ரேஷன் யோஜனா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து வந்தது. திட்டத்தின் பெயரை மாற்றி குறிப்பாக ’முக்கிய மந்தரி’ பெயரை நீக்கவும் தில்லி அரசு ஒப்புக்கொண்டது.

இதற்கிடையை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி ரேஷன் விநியோகஸ்தா்கள் சங்கத்தினா் வழக்குத் தொடா்ந்தனா். அப்போது வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, தில்லி அரசின் வழக்குரைஞா் தெரிவித்த வாதத்தை உயா்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பா் 27 -ஆம் தேதி இந்தத் திட்டத்திற்கு நிபந்தனையுடன் தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அனுமதியளித்து புதிய உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் கேஜரிவால் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவையின் முடிவைகளையும் கோப்புகளையும் மீண்டும் துணைநிலை ஆளுநா் ஒப்புதலுக்கு முதல்வா் கேஜரிவால் அனுப்பியுள்ளாா். அவரது ஒப்புதல் கிடைத்தவுடன் இத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com