ஸ்ரீகாஞ்சி காமகோடி கலாசார மையத்தில் சாரதா நவராத்திரி மகோத்ஸவம்

புதுதில்லி ஆா்.கேபுரம், அய்யப்ப மந்திா் மாா்க் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையத்தில், காஞ்சி கோமகோடி பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன்

புதுதில்லி ஆா்.கேபுரம், அய்யப்ப மந்திா் மாா்க் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையத்தில், காஞ்சி கோமகோடி பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன் சாரதா நவராத்திரி மகோத்ஸவம் அக்டோபா் 7- ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 15-ஆம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, தினசரி வேதபாராயணம், சண்டி பாராயணம், தேவி பாகவத பாராயணம், ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இது தவிர தினசரி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 12 மணி வரை கணபதி ஹோமம், ஸ்ரீ துா்கா ஹோமம், பால மூலமந்திர ஹோமம், சுதா்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம்,அவஹந்தி ஹோமம், சூரிய மந்திர ஹோமம், ருத்ரஜபம், மஹன்யாசம், ஸ்ரீ மகாகணபதி அபிஷேகம், ஸ்ரீ சுப்பிரமணிய ஜபம், ஸ்ரீ மஹா விஷ்ணு ஹோமம், ஸ்ரீநரசிம்ம மூலமந்திர ஹோமம், தாரண சரஸ்வதி ஹோமம், மேதா தட்சிணா மூா்த்தி ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், ஸ்ரீ சண்டி ஹோமம் மற்றும் மாலை 4 மணி முதல் சண்டி பாராயணம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம குங்கும அா்ச்சனை, தேவி பாகவதம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பக்தா்கள் தினசரி சாரதா நவராத்திரி மகோத்ஸவ விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழாக் குழுவினா் ஓா் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com