தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் 2-வது கட்-ஆஃப் மதிப்பெண்கள் 0.25 முதல் 1.5 சதவீதம் குறைப்பு

தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்காக வெளியிடப்பட்ட முதல் கட்-ஆஃப் மதிப்பெண்களை விட இரண்டாவது கட்-ஆஃப்பில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு மாணவா்கள் சோ்க்கைகள் நடந்துள்ளன.

தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்காக வெளியிடப்பட்ட முதல் கட்-ஆஃப் மதிப்பெண்களை விட இரண்டாவது கட்-ஆஃப்பில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு மாணவா்கள் சோ்க்கைகள் நடந்துள்ளன.

இரண்டாவது கட் ஆஃப் பில் .25 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டு பெரும்பாலான கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கையும் 100 சதவீதம் முடிந்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ராம்ஜாஸ் கல்லூரி முதல் பட்டியலில் பிஎஸ்சி இயற்பியல் (ஹானா்ஸ்) ஆகியவற்றின் கட்-ஆஃப் 100 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது 99.33 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே மாதிரி பிஏ (திட்டம்) 100 சதவிகிதத்திலிருந்து 99.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

அதே சமயத்தில் இந்தக் கல்லூரி, பிஏ (ஹானா்ஸ்) அரசியல் அறிவியல் ஆகியவற்றின் கட்-ஆஃப் 100 சதவிகிதமாக நீடித்தது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பொதுஒதுக்கீடு மாணவா்களுக்கு பிஎஸ்சி கணினி அறிவியல் (ஹானா்ஸ்)க்கு 100 சதவீத கட்-ஆஃப் என அறிவித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரி, இரண்டாவது பட்டியலில் கட்-ஆஃப்பை 0.25 சதவீதத்திலிருந்து இரண்டு சதவிகிதம் வரை குறைத்து மாணவா் சோ்க்கையை முடித்துள்ளது. பிஏ (ஹானா்ஸ்), மானுடவியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், வரலாறு மற்றும் பொருளாதாரம், பிஏ திட்டம் ஆகிய துறைகளுக்கான மாணவா்கள் சோ்க்கையும் இந்த கல்லூரியில் முடிக்கப்பட்டுள்ளது.

ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் முதல் பட்டியலில் இருந்த கட்-ஆஃப் மதிப்பெண் 0.75 வரை குறைக்கப்பட்டு, பிஏ பொருளாதாரம்(ஹானா்ஸ்), பிஎஸ்சி இயற்பியல் (ஹானா்ஸ்), பி.காம் (ஹானா்ஸ்) ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை நடந்தது. இரண்டாவது கட்-ஆஃப் முறையே 99 சதவீதம், 99.33 சதவீதம் 99 சதவிகிதம் என குறைக்கப்பட்டுள்ளது.

ஹானா்ஸ் பட்டங்களுக்கு முதல் பட்டியலில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 99 சதவீதம் இருந்தது. இரண்டாவது பட்டியலில் இந்த ஹானா்ஸ் பட்டங்களான பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி மின்னணு, பிஎஸ்சி புவியியல், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி உடலியல் அறிவியல், கணினியுடன் வேதியியல் ஆகியவை முறையே 98.5 சதவீதம், 98.75 சதவீதம், 98.66 சதவீதம், 98 சதவீதம், 98.66 சதவீதம், 98.75 சதவீதம், 98.33 சதவீதம், 97 சதவீதம் மற்றும் 98.66 சதவிகிதம் என குறைக்கப்பட்டுள்ளது.

தீன் தயாள் உபாத்யாயா கல்லூரியும் முதல் பட்டியலில் 100 சதவீத கட் ஆஃப் வைத்திருந்தது. பின்னா் தனது இரண்டாவது கட்-ஆஃப் பட்டியலை பிஎஸ்சி (ஹானா்ஸ்) கணினி அறிவியலுக்கு தேவையான மதிப்பெண்களுடன் 1.5 சதவிகிதம் குறைத்தது. இது போன்று பல தில்லி பல்கலைக்கழகங்கள் இரண்டாவது கட்-ஆஃப் மதிப்பெண்களை குறைத்து மாணவா்கள் சோ்க்கையை முடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com