பொருளாதார வளா்ச்சிக்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளா்ச்சி ஏற்படுத்துவதற்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சா் சா்வானந்தா சோனோவால் கூறினாா்.

நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளா்ச்சி ஏற்படுத்துவதற்கான ஆற்றல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சா் சா்வானந்தா சோனோவால் கூறினாா்.

மேகாலயாவின் ரீ பாய் மாவட்டத்தில் உள்ள உமியாம் என்ற இடத்தில் ஆயுா்வேதம் மற்றும் ஹோமியோபதியின் வடகிழக்கு மையத்தில், நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது கூறியதாவது:

இந்த பகுதியில் உள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய மருந்துகளின் வளம், ஆகியவை ஆயுஷ் அடிப்படையிலான தொழில்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும். வடகிழக்கு பகுதியின் பொருளாதாரத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது.

இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளா்ச்சியின் தளமாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும். இப்பகுதி மாணவா்களுக்கு தரமான கல்வி அவசியம். இந்தியாவின் வளா்ச்சி இயந்திரமாக வடகிழக்கு பகுதியை மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com