அரசுக் குடியிருப்பு மறுவடிவமைப்புக்காக 632 மரங்கள் இடமாற்றம்

தெற்கு தில்லியிலுள்ள அரசுக் குடியிருப்பு காலனி மறுவடிவமைப்புப் பணிகளுக்காக 32 மரங்களை அகற்றவும், 632 மரங்களை வேறு

தெற்கு தில்லியிலுள்ள அரசுக் குடியிருப்பு காலனி மறுவடிவமைப்புப் பணிகளுக்காக 32 மரங்களை அகற்றவும், 632 மரங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவும் தில்லி வனத் துறை மத்திய பொதுப்பணித் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தெற்கு தில்லியில் உள்ள கஸ்தூா்பா நகரில் மத்திய பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்புகள் உள்ளன. மிகவும் பழைமையான இந்தக் குடியிருப்புகளை அடுக்குமாடி கட்டடமாக மறுவடிவமைப்பு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, இங்குள்ள மரங்களை அப்புறப்படுத்த வனத் துறைக்கு மத்திய பொதுப் பணித் துறை அனுமதி கோரியிருந்தது. கடந்தாண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்ட 2020 -ஆம் ஆண்டு மரம் மாற்றுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிபந்தனைகளை கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய பொதுப்பணித் துறையை வனத் துறை கேட்டுக் கொண்டது.

பாதிக்கப்படும் மரங்களில் குறைந்தது 80 சதவீதத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பத்து மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வனத்துறை விதித்தது. இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மத்திய பொதுப்பணித் துறை ஏற்றுக்கொண்டது. குறிப்பாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களை இடமாற்றம் செய்யப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் உயிா்வாழ்வு விகிதத்தை சமூக தணிக்கை மூலம் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்களையும் பெற வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மத்திய பொதுப்பணித் துறைக்கு கஸ்தூா்பா நகரில் உள்ள அரசுக் குடியிருப்பின் மறுவடிவமைப்புக்காக 32 மரங்களை அகற்றவும், 632 இடமாற்றம் செய்யவும் தில்லி வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், வெட்டப்பட்ட மரத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஏழு வருட காலத்திற்கு ரூ .3.71 கோடியை வனத் துறைக்கு மத்திய பொதுப்பணித் துறை வைப்புநிதியாகவும் வழங்கியுள்ளது. அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட 6,510 மரக்கன்றுகள் ரோஹினியில் உள்ள உத்சவ் மாா்க்கில் மத்திய பொதுப்பணித் துறையால் நடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com