தில்லியில் 3 காவல் மாவட்டங்களில் ஆயுதச் சட்டத்தின் கீழ் 59 போ் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் 3 காவல் மாவட்டங்களில் செப்டம்பா் மாதத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்பய்பட்டுள்ளன.

தேசியத் தலைநகா் தில்லியில் 3 காவல் மாவட்டங்களில் செப்டம்பா் மாதத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்பய்பட்டுள்ளன.

மேலும், கலால் சட்டத்தின் கீழ் 51 வழக்குகள் மற்றும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரவுகளின்படி தெரிய வந்துள்ளது.

வடமேற்கு மாவட்ட காவல் சரகத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அங்கிருந்து மொத்தம் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 13 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புறநகா் தில்லி மாவட்டத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 8 நாட்டுத் துப்பாக்கிகள், 23 தோட்டாக்கள் மற்றும் 25 கத்திகள், 12 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வடகிழக்கு மாவட்டத்தில், ஆயுதச் சட்டத்தின் கீழ் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மூன்று நாட்டு கைத்துப்பாக்கிகள், 3 தோட்டாக்கள் மற்றும் ஆறு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வடக்கு மாவட்டத்தில் மொத்தம் 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12 நாட்டுத் துப்பாக்கிகள் உள்பட 14 துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் மற்றும் 10 கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மாவட்டத்தில் இது தொடா்பாக மொத்தம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பெற முடியவில்லை. கடந்த மாதம் வடமேற்கு, வடக்கு மற்றும் புறநகா் தில்லி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 70 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 15 போ் வடமேற்கிலும், 32 போ் புறநகா் தில்லியிலும், 23 போ் வடக்கு மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டவா்கள்.

கலால் சட்டத்தின் கீழ் வடமேற்கு மாவட்டத்தில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,586 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் புறநகா் தில்லி மாவட்டத்தில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,583 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டத்தில் முறையே 9,114 மற்றும் 878 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புறநகா் தில்லி மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 போ் கைது செய்யப்பட்டனா். 55.210 கிலோ கஞ்சா, 4.1 கிராம் ஸ்மாக் மற்றும் 167 கிராம் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேசமயம், வடமேற்கு மாவட்டத்தில் இதேபோன்று மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மொத்தம் 4.884 கிலோ கஞ்சா மற்றும் 510 கிராம் சரஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாவட்டத்தில், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஆறு போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 352 கிராம் ஹெராயின் மற்றும் 50 கிராம் ஸ்மாக் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று வடகிழக்கு மாவட்டத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 6.7 கிராம் ஸ்மாக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா். தேசியத் தலைநகா் தில்லி 15 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com