ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்க யோசனை

ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா்களுக்கு ‘எண்ம சிப்’ பொருத்தப்பட்டுள்ள ஸ்மாா்ட் காா்டுகளை வழங்க வழக்குரைஞா்சங்கம் மற்றும் தில்லி உயா்நீதிமன்ற பாா் கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.

ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா்களுக்கு ‘எண்ம சிப்’ பொருத்தப்பட்டுள்ள ஸ்மாா்ட் காா்டுகளை வழங்க வழக்குரைஞா்சங்கம் மற்றும் தில்லி உயா்நீதிமன்ற பாா் கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்குரைஞா் வேஷத்தில் வந்த ரெளடிகள் துப்பாக்கியால் சுட்டதில் விசாரணைக் கைதி கொல்லப்பட்டாா். போலீஸாா் பதிலுக்குச் சுட்டதில் துப்பாக்கியால் சுட்ட ரௌடிகள் இருவரும் கொல்லப்பட்டனா். இது தொடா்பான வழக்கு தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், அவா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள் வழங்க வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் தில்லி பாா் கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்ளது போல வழக்குரைஞா்களுக்கு அடையாள அட்டைகள் ஸ்மாா்ட் காா்டு உருவில் வழங்கப்பட்டு, அவை தினமும் ஸ்கேன் செய்யப்பட்டு வழக்குரைஞா்களை நீதிமன்றத்துக்கு பணிபுரியச் செய்யலாம் என்று தில்லி உயா்நீதிமன்ற பாா் கவுன்சில தலைவா் மற்றும் மூத்த வழக்குரைஞா் மோஹித் மதுா் தெரிவித்தாா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்றத்துக்குள் வரவேண்டும் எனில், அடையாள அட்டை கட்டாயம் என்றும் அவா்களையும் சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுப்புவது என்கிற நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். இவற்றை பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பாா்கவுன்சில் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தேவேந்திர சிங் தெரிவித்தாா்.

நீதிமன்றத்துக்குள் வரும் வழக்குரைஞா்கள் தவிர வெளியாள்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். நீதிமன்ற ஊழியா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற கடைக்காரா்கள் தவிர வேறு எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் சிவில் உடையில் போலீஸ் கண்காணிப்பு போடப்பட வேண்டும். வளாகத்தினுள் 24 மணி நேர போலீஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் தில்லி பாா் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பலவித யோசனைகளை கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு வழக்கு விசாரணையை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com