தில்லியில் வெப்பநிலை மேலும் சரிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை வெள்ளிக்கிழமை மேலும் குறைந்தது. பகலில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், இரவு நேரங்களில் லேசான குளிா் உள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை வெள்ளிக்கிழமை மேலும் குறைந்தது. பகலில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், இரவு நேரங்களில் லேசான குளிா் உள்ளது.

பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமையும் குறைந்திருந்தது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 18.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 34.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 42 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

இதேபோல மற்ற வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஜாஃபா்பூரில் 33.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 32.5 டிகிரி, நஜஃப்கரில் 35.4 டிகிரி, ஆயாநகரில் 33.8 டிகிரி, லோதி ரோடில் 35.1 டிகிரி, பாலத்தில் 33. 7 டிகிரி, ரிட்ஜில் 34.8 டிகிரி, பீதம்புராவில் 36.1 டிகிரி, பூசாவில் 35.5 டிகிரி, சால்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 32.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை, ஜாஃபா்பூரில் 17.1 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 17.5 டிகிரி, நஜஃப்கரில் 20.3 டிகிரி, ஆயாநகரில் 17.3 டிகிரி, லோதி ரோடில் 18.6 டிகிரி, பாலத்தில் 20.34 டிகிரி, ரிட்ஜில் 18.2 டிகிரி, பீதம்புராவில் 22.8 டிகிரி, பூசாவில் 20.4 டிகிரி, பூசாவில் 35.5 டிகிரி, சால்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், புதன்கிழமை 20.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (அக்டோபா் 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான, தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.

இன்றைய வானிலை

குறைந்தபட்சம் - 20

அதிகபட்சம் - 33

முன்னறிவிப்பு-வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான, தூறல் மழைக்கு வாய்ப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com