முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் பெண் அதிகாரியிடம் கொள்ளை
By DIN | Published On : 17th October 2021 06:17 AM | Last Updated : 17th October 2021 06:17 AM | அ+அ அ- |

ஜம்மு -காஷ்மீா் நிா்வாகத் துறையில் துணை தொழிலாளா் ஆணையராக உள்ள பெண் அதிகாரியிடம் தெற்கு தில்லியின் கான்பூா் பகுதியில் ’தக் தக்’ கும்பலைச் சோ்ந்தவா்கள் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது: 47 வயதுடைய அந்த அதிகாரி, தில்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசிப்பவராவாா். மூன்று நாள்களுக்கு முன்பு, அவா் ஒரு காரில் ஃபரீதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஒரு ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் அவரை கான்பூா் டி-பாயிண்டில் வழிமறித்து, காரில் எரிபொருள் கசிவதாகவும் காரை நிறுத்தும்படியும் கூறினா்.
இதைத் தொடா்ந்து, எரிபொருள் கசிவை பாா்ப்பதற்காக காரை அவா் நிறுத்தியுள்ளாா். அந்தச் சமயத்தில் மா்ம நபா் ஒருவா், ரூ.2,000, ஏடிஎம் காா்டு மற்றும் அடையாள அட்டையைக் கொண்ட அவரது கைப் பையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிவிட்டாா். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அந்தப் பெண் அதிகாரிக்கு லேசான காயமேற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாகஅடையாளம் தெரியாத கொள்ளையா்களுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், விசாரணை நடந்து வருகிறது, என்று போலீஸாா் தெரிவித்தனா்.