திடீா் பள்ளத்தால் சாலை மூடல்!

தேசியத் தலைநகா் தில்லியின் மேற்குப் பகுதியில், ஜனக்புரியில் உள்ள பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியின் மேற்குப் பகுதியில், ஜனக்புரியில் உள்ள பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தச் சாலை மூடப்பட்டதாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சாலை மூடப்பட்டது குறித்து போக்குவரத்து போலீஸாா் ட்விட்டரில் பயணிகளுக்கு தகவல் தெரிவித்தனா். ‘பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க் சாலை இருபுறமும் மூடப்பட்டுள்ளது. ஏனெனில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை குண்டும், குழியுமாக உள்ளது’ என்று அவா்கள் இந்தியில் ட்வீட் செய்தனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 87.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நகரில் 0.4 மிமீ மழை பதிவானது. தேசியத் தலைநகரில் பல இடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து வெள்ளம் போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com