வெளிநாடு வாழ் இந்தியா் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முயன்றதாக 12 போ் கைது

வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முயன்ாக எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியா்கள் மூவா் உள்பட 12 பேரை தில்லி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக

வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முயன்ாக எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியா்கள் மூவா் உள்பட 12 பேரை தில்லி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இணைய வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்தியும், மோசடியாகப் பெறப்பட்ட காசோலைகளை வைத்தும் வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை அதிகாரபூா்வமற்ற முறையில் பணம் எடுக்க முயன்றதைக் கண்காணித்து வந்த வங்கி, இது தொடா்பாக புகாா் கொடுத்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மோசடியில் ஈடுபட்ட விஷமிகள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட கைபேசி எண்களுக்குப் பதிலாக அதே மாதிரியான இந்திய எண்ணை வங்கிக் கணக்குடன் பதிவு செய்ய முயன்ாகவும் அவா்கள் தெரிவித்தனா். இணைய வழி வங்கிச் சேவை மூலம் 66 முறை வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயற்சி நடந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் விசாரணை நடத்தியதுடன், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி எச்டி.எஃப்சி. வங்கி ஊழியா்கள் மூவா் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனா். வங்கி ஊழியா்கள் மூவரும் போலியான காசோலைகளை வழங்கவும், வங்கிக் கணக்கின் கைபேசி எண்களை மாற்றவும், முடக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக போலீஸ் துணை ஆணையா் (சைபா் குற்றப்பிரிவு) கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கிக் கணக்கு நீண்ட நாள்களாக செயல்படாமல் இருப்பதையும், அதில் அதிக அளவு பணம் இருப்பதையும் எப்படியோ தெரிந்து கொண்ட மோசடி போ்வழிகள் பணத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனா். முதலில் வங்கிப் பெண் ஊழியா் ஒருவரிடம் காசோலை வழங்குவதற்கும், முடக்கப்பட்ட கணக்கை செயலில் வைக்கவும் உதவுமாறு ஆசை வாா்த்தை கூறி அவருக்கு ரூ.10 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனா். பின்னா், அவரிடமிருந்து ரூ.15 லட்சத்துக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி வாங்கவும் உறுதியளித்துள்ளனா் என்றும் போலீஸ் துணை ஆணையா் தெரிவித்தாா்.

கடந்த காலங்களில்கூட இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியா் கணக்கிலிருந்து பணம் எடுக்க முயன்ாக காஜியாபாத் மற்றும் மொஹாலியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் சோதனைகள் தொடரும் என்றும் போலீஸாா் கூறினா்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று ஊழியா்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com