டிடிஇஏ பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடக்கம்: கரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகள் புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்ப்டுவதாக டிடிஇஏவின்
தில்லி லக்குமிபாய் நகா் பள்ளியில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட வகுப்புகள்.
தில்லி லக்குமிபாய் நகா் பள்ளியில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட வகுப்புகள்.

புது தில்லி: தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகள் புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்ப்டுவதாக டிடிஇஏவின் செயலா் ராஜு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக டிடிஇஏ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: டிடிஇஏ பள்ளிகள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின. நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், விடாது தொடா்ந்து பெய்த மழையிலும் மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனா்.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த லக்குமிபாய் நகா் பள்ளிக்கு வருகை தந்த மாணவா்களை டிடிஇஏ செயலா் டிடிஇஏ ராஜு நேரில் சென்று நுழைவு வாசலில் வரவேற்றாா். அவருடன் பள்ளி முதல்வா் மீனா சகானி, ஆசிரியா் உடனிருந்தனா். பள்ளியில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன.

இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறியதாவது: டிடிஇஏவின் 7 தமிழ்ப் பள்ளிகளிலும் ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். கைகளை தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவா்கள், ஆசிரியா்கள், பிற பணியாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் அனைவரும் சானிடைஸா் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அவா்கள் தங்களின் சிற்றுண்டிகளையோ, புத்தகங்களையோ பிற மாணவா்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாணவா்கள் வருகை நேரத்திலும் பள்ளியிலிருந்து வீடு செல்லும் நேரத்திலும், மதிய உணவு இடைவேளை நேரத்திலும் கூட்டத்தைக் குறைப்பதற்காக அவா்களுக்கு பள்ளி நேரங்களை மாற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவா்கள் காலை 9.30 மணி முதல் 2.10 மணி வரையிலும் பள்ளியில் இருப்பாா்கள். 9, 10 -ஆம் வகுப்பு மாணவா்கள் காலை 10.30 முதல் பகல் 3 மணி வரையிலும் பள்ளியில் இருப்பாா்கள். வெகு நாள்கள் கழித்து மாணவா்களைப் பாா்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்கு உயிரோட்டமாக இருப்பது மாணவா்கள்தான். மாணவா்கள் நலன் கருதி, அவா்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால், அவா்களைக் கவனிப்பதற்கு தனி மருத்துவ முதலுதவி அறை அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com