பெண் அலுவலா் ரபியா கொலை வழக்கை தில்லிக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் மனு

குடிமை பாதுகாப்பு பெண் அலுவலா் ரபியா சைபி கொலை வழக்கை தில்லிக்கு மாற்றக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தில்லி காங்கிரஸ் குழுவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

குடிமை பாதுகாப்பு பெண் அலுவலா் ரபியா சைபி கொலை வழக்கை தில்லிக்கு மாற்றக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தில்லி காங்கிரஸ் குழுவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தில்லி சங்கம் விஹாரைச் சோ்ந்த குடிமை பாதுகாப்பு அலுவலா் ரபியா சைபி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கு, ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள சூரஜ் குண்ட் காவல் நிலையத்தில் 17.8.2021 பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை தில்லி லாஜ்பத் நகா் அமலா் காலனி காவல் நிலையத்திற்கு மாற்றவும், சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பிடம் வழக்கை விசாரணைக்கு ஒப்படைக்கவும் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா் ஜோதிகா கல்ராவிடம் தில்லி காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவுத் தலைவா் சுனில் குமாா் தலைமையிலான குழு மனு அளித்தது.

இதுகுறித்து பின்னா் சுனில் குமாா் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட பெண் லாஜ்பத் நகா், டி.எம். அலுவலகத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் தில்லியில் இருந்து கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இதனால், இந்த வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும். மேலும், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தில்லி அரசு இழப்பீடாக ரூ.1 கோடியும், குடியிருப்பும், அவரைச் சாா்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com