ரோஹிணி ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழா

தேசியத் தலைநகா் தில்லியில் ரோஹிணி செக்டாா் 7-இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறுகிறது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ரோஹிணி செக்டாா் 7-இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஸ்ரீ தா்ம சாஸ்தா சேவா சமாஜம் செய்து வருகிறது.

இந்தக் கோயிலில் ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ விநாயாகா், ஸ்ரீ துா்கை, நவக்கிரக சந்நிதிகளில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அண்மையில் முடிவடைந்தன. கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஸ்ரீ தாழமான் மடம் தந்திரி கந்தருரு ராஜீவுரு மற்றும் குழுவினா் கும்பாபிஷேக வைபவங்களை நடத்திவைக்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில் ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது. பின்னா், கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்று ஸ்ரீ தா்ம சாஸ்தா சேவா சமாஜத்தின் செயலாளா் எம்.ஆா். நாயா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com