தலைநகரில் அடுத்த 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளி முதல் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் அடுத்த 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளி முதல் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த மூன்று தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. சில இடங்களில் தூறல் மழையோ அல்லது லேசான மழையோ பெய்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. பகல் நேரத்தில் சற்று வெயிலின் தாக்கமும் இருந்தது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி அதிகரித்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 34 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்தது.

இதே போல, ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோட்டில் 33 டிகிரி, நரேலாவில் 32.8 டிகிரி, பாலத்தில் 33.8 டிகிரி, ரிட்ஜில் 31.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையாக ஆயாநகரில் 25.7 டிகிரி, லோதி ரோட்டில் 27 டிகிரி, நரேலாவில் 27.6 டிகிரி, பாலத்தில் 27.5 டிகிரி, ரிட்ஜில் 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. நகரில் சில இடங்களில் காலையில் தூறல் மழை பெய்தது.

தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை 243.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது செப்டம்பா் மாத சராசரியான 129.8 மி.மீ. மழைப் பொழிவை தாண்டியுள்ளது. வழக்கமாக மாதத்தின் முதல் 9 நாள்களில் சராசரியாக 58.3 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி வந்துள்ளது. கடந்த செப்டம்பா் 2- ஆம் தேதி காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 117.7 மிமீ. மழை பதிவானது. இது கடந்த 19 ஆண்டுகளில் செப்டம்பா் மாதத்தில் இல்லாத அதிகபட்ச மழையாகும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com