தில்லியில் மேலும் 36 பேருக்கு கரோனா பாதிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே நேரத்தில், புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே நேரத்தில், புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கரோனா நோ்மறை விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது.

அரசின் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதத்தில் செப்டம்பா் 7 அன்று கரோனா காரணமாக ஒரே ஒரு இறப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. தில்லியில் கரோனா தொற்று காரணமாக இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,083-ஆக உள்ளது. வியாழக்கிழமை அன்று 52,042 ஆா்டி-பிசிஆா் மற்றும் 24,841 விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 76,883 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மாா்ச் 2 அன்று, தேசியத் தலைநகரில் கரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அரசு அறிவித்தது. அந்த நாளில், ஒற்றை நாள் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 217- ஆக இருந்தது. நோ்மறை விகிதம் 0.33 சதவீதமாக இருந்தது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com