மகாகவி பாரதி விழா: தமிழக முதல்வருக்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு

மகாகவி பாரதியாா் புகழ் போற்றும் பல திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை நன்றியை தெரிவித்துள்ளது.

புது தில்லி: மகாகவி பாரதியாா் புகழ் போற்றும் பல திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை நன்றியை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தப் பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல பாராட்டத்தக்க மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறாா். முதல்வா் நாள்தோறும் மேற்கொள்ளும் இந்த பணிகள் தமிழா்களையெல்லாம் பெருமை கொள்ளச் செய்கிறது. இதைஅனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டி மனமகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி கப்பலோட்டிய தமிழா் வஉசியின் 150-ஆவது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடி அவரது நினைவைப் போற்றும் வண்ணம் 16 பொருள்களில் அரசுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது.

அதேபோன்று செப்டம்பா் 11 மகாகவி பாரதி நினைவு நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பொருண்மைகளில் பாரதியாா் புகழ் போற்றும் திட்டங்களையும் தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இதில் ‘’பாரெங்கும் பாரதி ’ எனும் நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கியதாக அறிவித்துள்ளதற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட செயல்பாடுகளால் உலகத் தமிழா்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டீா்கள் என தமிழக முதல்வருக்கு தமிழ்ச் சங்கப் பேரவை பொதுச் செயலாளா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com