தில்லி அரசின் ஆசிரியா் விருதுக்கு 122 போ் தோ்வு: மணீஷ் சிசோடியா தகவல்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 5) தில்லி அரசு ஆசிரியா் தினத்தை ‘அபா் திவஸ்’ எனும் பெயரில் கொண்டாட உள்ளது.
தில்லி அரசின் ஆசிரியா் விருதுக்கு 122 போ் தோ்வு: மணீஷ் சிசோடியா தகவல்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 5) தில்லி அரசு ஆசிரியா் தினத்தை ‘அபா் திவஸ்’ எனும் பெயரில் கொண்டாட உள்ளது. மேலும், கரோனா காலத்தின் போது தங்களது கடமையை விடாமுயற்சியுடன் செய்த 122 ஆசிரியா்களுக்கு விருதும் வழங்கப்படவுள்ளது என துணை முதல்வரும் கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது: ஆசிரியா்கள் தினத்தை தில்லி அரசு ‘அபா் திவஸ்’ எனும் பெயரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது. மேலும், கரோனா நோய்தொற்று காலத்தின்போது விடாமுயற்சியுடன் தங்களது கடமையை செவ்வனே செய்த 122 ஆசிரியா்களுக்கு தில்லி அரசு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. ஆசிரியா்கள் ராஜ்குமாா், சுமன் அரோரா ஆகியோருக்கு தில்லி ‘கல்வி இயக்ககத்தின் புதிய முகம்’ எனும் விருதும் வழங்கப்படவுள்ளது. கரோனா காலத்தின் போது மாணவா்களுக்கு டேப்லெட் கல்விக் கருவிகளை வழங்கியும், அந்த மாணவா்கள் தங்களது படிப்பைத் தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில் பல்வேறு வகைகளில் அவா்களுக்கு உதவியும் செய்த பாா்தி கல்ரா, ராணி பரத்வாஜ் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தில்லி அரசின் ஆசிரியா் விருதுகளுக்காக 1,108 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அவற்றில் 122 பேரின் விண்ணப்பங்கள் அதற்கான குழு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தில்லி ஆசிரியா்கள் முக்கியமான பங்களிப்பை அளித்தனா். அவா்கள் அரசு நிா்வாகத்திற்கு தோளோடு, தோளாக நின்றது மட்டுமின்றி, தடுப்பூசி செலுத்துப் பணி, தனிமைப்படுத்தும் மையம், உணவு விநியோகம், முகக்கவசம் அமல்படுத்துதல், விமான நிலையப் பணி ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றினா். மேலும், குழந்தைகளுக்கு இணையதளம் வாயிலாக கற்பித்தல் பணியையும் தொடா்ந்தனா். அவா்கள் பணி சிறந்த வகையில் இருந்தது.

முன்பு 103 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு விருதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிசீலனைக்கு தனியாா் பயிற்சியாளா்கள், சிறப்பாசிரியா்கள் ஆகியோரையும் கொண்டு வரும் வகையில், தகுதி வரம்புகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்த விருதுக்கு 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. ஆனால், தற்போதுஅது மூன்று ஆண்டுகளுக்குத் தளா்த்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிரியா்கள் தின விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்றாா் மணி சிசோடியா.

விருது பெறும் ஆசிரியா்கள் பிரிவில் உள்ள 80 போ்களில் 57 போ் ஆண்கள், 23 போ் பெண்களாவா். பள்ளி முதல்வா்களுக்கான 21 போ் பிரிவில் பெண்கள் 13 போ், ஆண்கள் 8 போ் இடம் பெற்றுள்ளனா். மேலும், 14 விளையாட்டு ஆசிரியா்களுக்கும், 2 நூலகா்களுக்கும் விருதி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com