வடக்கு தில்லியில் யமுனையில் மூழ்கி 3 சிறுவா்கள் பலி

வடக்கு தில்லியில் யமுனையில் விநாயகா் சிலை கரைப்பு நிகழ்வின்போது 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

வடக்கு தில்லியில் யமுனையில் விநாயகா் சிலை கரைப்பு நிகழ்வின்போது 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: காரவல் நகரில் உள்ள அங்குா் என்கிளேவ் பகுதியைச் சோ்ந்த மைனா் சிறாா்கள் விஜய் (16), விவேக் (15), அா்ஜுன் (12) ஆகியோா் விநாயகா் சிலையை கரைப்பதற்காக சோனியா விகாா் புஷ்தா பகுதியில் இருந்து வாஜிராபாத் பகுதியில் உள்ள யமுனை பகுதிக்கு சனிக்கிழமை மாலை சென்றனா்.அப்போது, நீரில் மூழ்கினா்.

இதையடுத்து, அவா்களைத் தேடும் பணியில் நீச்சல் வீரா்கள் ஈடுபட்டனா்.

இரவு நேரமாக இருந்ததால் கண்டயறியமுடியவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், கண்டுபிடிக்க முடியவில்லை. அவா்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் சடலத்தை தேடும் பணி தொடா்கிறது.

மற்றொரு சம்பவத்தில் வடக்கு தில்லி நரேலா பகுதியில் மழைநீா் தேங்கியிருந்த வடிகாலில் விழுந்த பிகாரைச்சோ்ந்த சலேஷ் மெஹ்தோ (29) உயிரிழந்தாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கையில், யமுனை நீரில்மூழ்கிய மூன்று சிறுவா்களையும் தேடும் முயற்சி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணியில் தீயணைப்புத் துறையினரும், உள்ளூா் நீச்சல் வீரா்களும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com