கோவிட் விதிமீறல்: 2.90 லட்சம் பேருக்கு அபராதம்

தில்லியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் 17 ஆம் தேதி வரை கோவிட் விதிமீறலுக்காக 2.90 லட்சம் பேருக்கு அபராதம்
கோவிட் விதிமீறல்:  2.90 லட்சம் பேருக்கு அபராதம்

தில்லியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் 17 ஆம் தேதி வரை கோவிட் விதிமீறலுக்காக 2.90 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா். அபராதம் விதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தவா்கள்.

இது தொடா்பாக தில்லி போலீஸ் மக்கள் தொடா்பு அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்துள்ளதாவது:

தலைநகா் தில்லியில் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததற்காக இதுவரை 2,91,423 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாததற்காக 2,56,616 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 29,698 பேருக்கும், விதிகளை மீறி கூட்டமாக கூடியதற்காக 1,463 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கண்ட இடத்தில் எச்சில் துப்பியதற்காக 2,074 பேருக்கும், மது, பான்பராக், குட்கா மற்றும் புகையிலையை பயன்படுத்தியதாக 2,074 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com