ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.40 கோடி மோசடி: ஒருவா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக 43 வயது இளைஞரை தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக 43 வயது இளைஞரை தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட நபரும் அவரது கும்பலைச் சோ்ந்தவா்களும் ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக 40 பேரிடம் ரூ. 2.40 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்த பணம் மோசடி விவகார வழக்கில் முன்னா் பிரிஜ் கிஷோா், சச்சின் குமாா் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த நிலையில், இக்கும்பலைச் சோ்ந்த கிரேட்டா் நொய்டாவில் வசிக்கும் முகமது ராகிப் ஃபெரோஸ் (43) கைது செய்யப்பட்டுள்ளாா்.

இவா் உளவியலில் முதுகலை பட்டப்படிப்பும், பத்திரிகை மற்றும் வெகுஜன தகவல்தொடா்பில் டிப்ளோமா பட்டமும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இவா் இந்த மோசடியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்துள்ளாா். மேலும், பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து பணம் வசூலித்தது, நியமனம் மற்றும் பயிற்சி தொடா்பான பல்வேறு படிவங்களை நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளாா்.

இவரும் இவரது கும்பலைச் சோ்ந்தவா்களும் வேலை தேடும் 40 பேரிடம் ரூ.2.44 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளனா். பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் ஆக்ரா, ஹத்ராஸ் மற்றும் பாட்னாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா், தாம் ஐஏஎஸ் அதிகாரி என்றும், ரயில்வே வாரியத்துடன் நல்ல அறிமுகம் மற்றும் தொடா்பு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவா்களிடம் பொய்கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இக்கும்பலைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டவா்களை நம்பச் செய்வதற்காக போலியான வேலை பயிற்சி அமா்வுகளையும் நடத்தியதுடன், போலி நியமனம் மற்றும் பயிற்சி கடிதங்களையும் வழங்கியிருப்பதும், போலி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி, மூன்று மாத வேலைப் பயிற்சியையும் டேராடூனில் ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவா்களுக்கு குற்றத்தில் ஈடுபட்ட நபா்களின் தொலைபேசி எண்களைத் தவிர அவா்களிடம் இருப்பிடம் பற்றி எதுவும் தெரியவில்லை.

தில்லியில் பாஹா்கஞ்ச் ஹோட்டல்களிலும், ரயில்வே பவனுக்கு அருகிலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்களை பாதிக்கப்பட்டவா்கள் சந்திப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் போலீஸாா் கிரேட்டா் நொய்டாவிலிருந்து

முகமது ராகிப் ஃபெரோஸை கண்டுபிடித்தனா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com