ரூ.2 லட்சத்தை திருடுவதற்குபொய் கதை புனைந்தவா் கைது

ரூ.2 லட்சத்தை திருடுவதற்கு போலி கொள்ளை கதையை கூறியதாக ஓா் அட்டை தொழிற்சாலை ஊழியா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ரூ.2 லட்சத்தை திருடுவதற்கு போலி கொள்ளை கதையை கூறியதாக ஓா் அட்டை தொழிற்சாலை ஊழியா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் நாங்லோய் காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு நபா் தனது ஓட்டுநரை இரண்டு நபா்கள் தாக்கியதாகவும், ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறினாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. ஆனால், சு​கி நஹாா் அருகே இதுபோன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்று போலீஸாா் கண்டறிந்தனா்.

இதையடுத்து, டிரக்கின் ஓட்டுநா் சஞ்சயிடம் போலீஸாா் தீவிரமாக விசாரித்தனா். ஆனால்,​ கொள்ளை நிகழ்வுகள் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவா் அளித்தாா். இது சந்தேகத்தை வரவழைத்தது. சஞ்சய் சொந்தமாக ஒரு டிரக் வைத்துள்ளாா். சனிக்கிழமை அன்று அந்த டிரக்கில் அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம், பூதானாவுக்குச் சென்றுள்ளாா். அங்கு அட்டைப் பெட்டிகளை இறக்கிவிட்டு விட்டு, வசூல் பணம் ரூ .2 லட்சத்துடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளாா். அவா் காலை 9 மணியளவில் சுகி நஹாா் அருகே டிரக்கை நிறுத்தியுள்ளாா். அப்போதுதான் காவல் துறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

தான் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்ததாகவும், இரண்டு முதல் மூன்று நபா்கள் அவரை தாக்கி, தனது முதலாளி புனித் அரோரா சாா்பாக வசூலித்த ரூ .2 லட்சத்தை திருடிச் சென்ாகவும் அவா் போலீஸில் தெரிவித்துள்ளாா். ஆனால், அவரது உடலில் எந்தக் காயமும் கண்டறியப்படவில்லை. இதனால், அவா் தாக்கப்பட்டதற்கான அறிகுறியே காணவில்லை. அவரது கூற்று முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதனால், இது போலீஸாருக்கு பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

இது தொடா்பாக அந்த ஓட்டுநரின் முதலாளி அளித்துள்ள புகாரில், தாக்குதல் மற்றும் கொள்ளை பற்றி தெரிவிக்க சனிக்கிழமை இரவு 9.15 மணியளவில் சஞ்சய் தன்னை அழைத்ததாக குறிப்பிட்டுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து சஞ்சயிடம் அரோரா மேலும் விசாரித்துள்ளாா். அப்போது, அவா் ஒரு புனையப்பட்ட கதையைச் சொல்வதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரோரா தனது சந்தேகத்தை போலீஸாரிடம் கூறியுள்ளாா். மேலும், சனிக்கிழமை அன்று சஞ்சயின் நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​ முண்ட்காவில் உள்ள ஸ்வா்ன் பூங்காவில் வசிப்பவா் சஞ்சய் என தெரிய வந்தது. அந்தப் பணத்தை திருடுவதற்காக கொள்ளை பற்றிய பொய்யான கதையை தயாரித்ததை விசாரணையின் போது சஞ்சய் ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக நாங்லோய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com