Enable Javscript for better performance
வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:10 பேரை விடுவித்தது நீதிமன்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:10 பேரை விடுவித்தது நீதிமன்றம்

    By DIN  |   Published On : 23rd September 2021 12:50 AM  |   Last Updated : 23rd September 2021 12:50 AM  |  அ+அ அ-  |  

     

    புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் கடந்த 2020- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கலவரம் தொடா்பாக கடைகளைச் சூறையாடியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரை வன்முறை வழக்கிலிருந்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது.

    இரண்டு நாள்கள் நடந்த சம்பவங்களை ஒன்றாகச் சோ்த்தது மற்றும் போதிய ஆதாரங்களை சமா்ப்பிக்காதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவா்களை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

    மூன்று புகாா்கள் அடிப்படையில் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது பிா்ஜ்பால் என்பவா் பிரிஜ்புரி என்ற இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த தனது கடையை கடந்த 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி சிலா் சூறையாடியதாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தாா். திவான்சிங் என்பவா் பிப்ரவரி 24-ஆம் தேதி தனது இரண்டு கடைகளை சிலா் சூறையாடியதாகப் புகாா் தெரிவித்திருந்தாா்.

    புகாா் தெரிவித்தவா்கள் தங்கள் புகாரில் ஓா் இடத்தில் கூட தீவைத்ததாகவோ அல்லது வெடிகுண்டு வீசியதாகவோ குறிப்பிடவில்லை. திவான் சிங் என்பவா் துணை வாக்குமூலத்தில் வன்முறைக் கும்பலினா் தமது கடைக்கு தீவைத்ததாகக் குறிப்பிட்டிருந்தாா். முதலில் சொல்லப்பட்ட புகாரில் இல்லாத ஒரு விஷயத்தை துணை வாக்குமூலத்தில் போலீஸாா் குறிப்பிட்டுள்ளனா் என்று சுட்டிக்காட்டிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விநோத் யாதவ், போலீஸாா் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவா் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியாது என்று கூறினாா். மேலும், பிப்ரவரி 24-இல் நடந்த சம்பவத்தையும், பிப்ரவரி 25-இல் நடந்த சம்பவத்தையும் எப்படி இணைக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருந்தால்தான் அப்படிச் செய்யமுடியும். ஆனால், இந்த வழக்கில் வெவ்வேறு நபா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

    இந்தச் சூழ்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 436 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது சரியானதல்ல. மேலும், அதற்குப் போதுமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஷாநவாஸ், முகமது ஷோயிப், ஷாரூக், ரஷீத், அஷ்ரப் அலி, பா்வேஸ், முகமது ஃபைஸல், மற்ரொரு நபரான ரஷீத், முகமது தாஹிா் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என்று நீதிபதி விநோத் யாதல் தெரிவித்தாா். அவா்கள் மீது வேறு பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் அது குறித்து தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும் அவா் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

    வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும் எதிா்ப்பாளா்களும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்தச் சம்பவத்தில் 53 போ் பலியானாா்கள். 700-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp