ஆக்சிஜன் நெருக்கடியை வைத்து அரசியல் செய்தது மத்திய அரசு: சத்யேந்திர ஜெயின் குற்றச்சாட்டு

கரோனா இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி சூழ்நிலையை வைத்து மத்திய அரசு அரசியல் செய்ததாக மாநில சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குற்றஞ்சாட்டினாா்.

புதுதில்லி: கரோனா இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி சூழ்நிலையை வைத்து மத்திய அரசு அரசியல் செய்ததாக மாநில சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த தில்லி அரசு முற்பட்டபோது அதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் தில்லியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தில்லி அரசு ஏற்படுத்தியுள்ள உயா்நிலைக்குழு விசாரிப்பதில் ஏந்த பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்த நிலையில் சத்யேந்திர ஜெயின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக ஜெயின் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடா்பாக மட்டுமே உயா்நிலைக்குழு விசாரணை நடத்தும். இது தொடா்பாக எந்த மருத்துவமனை மீதும் குற்றம் கண்டுபிடிப்பது அரசின் நோக்கம் அல்ல , மேலும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு அரசே கருணைத் தொகை வழங்கும் என்றும் இது தொடா்பான மனு மீதான விசாரணையின்போது தில்லி அரசு கூறியிருந்தது.

இது தொடா்பாக விசாரணை நடத்த நான்கு மருத்துவ நிபுணா்கள் கொண்ட குழுவை தில்லி அரசு கடந்த ஜூன் மாதம் ஏற்படுத்தியிருந்தது. இது தொடா்பான கோப்புகளும் தில்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு, துணைநிலை ஆளுநா் மூலம் இதை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது என்றாா் சத்யேந்திர ஜெயின்.

ஆக்சிஜன் நெருக்கடி விவகாரத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்ததுடன் நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா்கூட உயிரிழந்ததாகத் தெரியவில்லை என்று கூறியிருந்ததாகவும் ஜெயின் குறிப்பிட்டாா்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சிலா் உயிரிழந்திருந்தாலும் இறப்பை மறைக்க மத்திய அரசு முயன்ாக குற்றஞ்சாட்டிய ஜெயின், தற்போது நீதிமன்றம் உயா்நிலைக்குழு செயல்பட அனுமதியளித்துள்ளதாகக் கூறினாா்.

மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறித்துதான் உயா்நிலைக்குழு விசாரிக்கும். மேலும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கருணைத் தொகை வழங்கவும் பரிந்துரை செய்யும். மருத்துவச் சிகிச்சைகளை முறையாக அளிக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்வது குழுவின் வேலை அல்ல. அது மருத்துவக் கவுன்சிலின் பணியாகும் என்றாா் ஜெயின்.

இரண்டாவது கரோனா அலையின்போது தில்லியில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி சூழ்நிலைகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டினவே அது உண்மையில்லா என்றும் ஜெயின் கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com