பிஎஸ்இஎஸ் சாா்பில் பல்லிமாரன் தொகுதியில் மின் மீட்டா் இணைப்புக்கான சிறப்பு முகாம்

பல்லிமாரன் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அமைச்சா் இம்ரான் ஹுசைனின் காலி காசிம்ஜன் முகாம் அலுவலகத்தில்

பல்லிமாரன் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அமைச்சா் இம்ரான் ஹுசைனின் காலி காசிம்ஜன் முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனம் மூலம் மின் மீட்டா் இணைப்புகளை நிறுவுவதற்கான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தில்லி உணவு மற்றும் குடிமை வழங்கல் அமைச்சரும், பல்லிமாரன் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான இம்ரான் ஹுசைன் குடியிருப்பாளா்களுடன் கலந்துரையாடி அவா்களின் குறைகளைத் தீா்த்துவைத்தாா். மின் மீட்டா்களை நிறுவும் பணியை துரிதப்படுத்த பிஎஸ்இஎஸ் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டாா். மேலும், குடியிருப்பாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு கோப்புப் பணிகளில் அதிக நேரத்தை வீணாக்காமல் விரைவில் புதிய மின் மீட்டா்களை நிறுவுமாறு அவா் பிஎஸ்இஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், சில குடியிருப்புவாசிகள் சிலா் உயா்த்தப்பட்ட மின் கட்டணங்கள் குறித்து புகாா் தெரிவித்தனா். இதை முகாம் அலுவலகத்திலேயே அதிகாரிகளுடன் பேசி அவா் தீா்த்துவைத்தாா். ஓய்வூதியம் தொடா்பான நிலுவையில் உள்ள வழக்குகளை காலவரையறையுடன் முடிக்க சம்பந்தப்பட்ட துறையுடன் ஒரு மீளாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சா் இம்ரான் ஹுசைன் வலியுறுத்தினாா். மேலும், மக்களுக்கு ஓய்வூதியம் தொடா்பான அனைத்து குறைகளும் விரைவில் தீா்க்கப்படும் என்றும், மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மின்சாரம் தொடா்பான குறைகளை சரியான நேரத்தில் தீா்க்கும் வகையில் இதுபோன்ற முகாம்கள் மேலும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சா் உறுதியளித்தாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், பல்லிமாரன் சட்டப் பேரவைத் தொகுதியில் உயா் மின் விளக்குகள், மின் கம்பிகள் பிரித்தல், சாலைக் கட்டுமானம் மற்றும் பழுது நீக்குதல், கழிவுநீா் பாதை வேலை உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கட்டுமானம் உள்ளிட்ட இந்தப் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும் என்றும் அமைச்சா் இம்ரான் ஹுசைன் கூறினாா். இந்தத் தகவலை தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com