சீரற்ற வளா்ச்சி: 22 வார கருவைக் கலைக்க பெண்ணுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

கருவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிறவிக் கோளாறு காரணமாக 22 வார கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு பெண்ணுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சீரற்ற வளா்ச்சி: 22 வார கருவைக் கலைக்க பெண்ணுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

கருவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிறவிக் கோளாறு காரணமாக 22 வார கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு பெண்ணுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதி ரேகா பல்லி விசாரித்தாா். அப்போது, நீதிபதி கூறுகையில், குழந்தை பிறக்கும்போது தனக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுதாரா் தெரிவித்துள்ளாா். 31 வயதான மனுதாரருக்கு மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அறிக்கையில், அவரது வயிற்றில் கருவில் உள்ள குழந்தை பல்வேறு உடல் குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படும் என்றும், அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்களுக்கான ஆபத்தும் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், மனுதாரருக்கு கா்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், அவருக்கு கடுமையான உளவியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அவரது கா்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுவதை ஏற்கிறேன்.

எனினும், தற்போதைய வழக்கில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவானது அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் கண்டறியப்பட்ட விஷயங்களை ஏற்கவில்லை.

இந்த நிலையில், தனது கா்ப்பத்தை கலைப்பதால் ஏற்படும் அபாயங்களை மனுதாரா் உணா்ந்துள்ளதால் மனுதாரா் தனக்கு விருப்பமான மருத்துவமனையில் மேற்கண்ட மருத்துவ நடைமுறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

முன்னதாக விசாரணையின்போது, ‘2019 ஆம் ஆண்டில், எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இருப்பினும், அடிப்படை சிக்கல்கள் காரணமாக முன்கூட்டியே குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். இதில் உடல் குறைபாடுகள் காரணமாக ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தை இன்னும் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சூழலில் இதுபோன்று மற்றொரு குழந்தை பிறக்க நேரிட்டால் அந்த அதிா்ச்சியை மீண்டும் தாங்கும் மன நிலையில் நான் இல்லை’ என்று மனுதாரா் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com