பாதுகாப்பு தொழில் வழித்தடம், நியூட்ரினோ திட்டம்: மத்திய அமைச்சா்களுடன் தமிழக அமைச்சா்கள் சந்திப்பு

மத்திய அரசு கொண்டு வரவுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்திற்கான சோதனை மையங்கள், ஜவுளி பூங்கா திட்டம்,

மத்திய அரசு கொண்டு வரவுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்திற்கான சோதனை மையங்கள், ஜவுளி பூங்கா திட்டம், வனத் திட்ட நிதிகள் மற்றும் நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்தல் போன்றவை தொடா்பாக மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பியூஷ்கோயல், பூபேந்தா் யாதவ் ஆகியோரை தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கா.ராமசந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்தினா்.

தில்லி வந்த தமிழக தொழில்த் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சா் ராஜ்நாத்சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சக அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா். தமிழகத்தில் மத்தி அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் (ஈங்ச்ங்ய்ஸ்ரீங் ண்ய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் ஸ்ரீா்ழ்ழ்ண்க்ா்ழ்) திட்டத்தை தொடா்பாக விவாதித்தனா். இந்தச் சந்திப்பின் போது தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே .எஸ்.விஜயன், தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளா் நா.முருகானந்தம், தமிழக அரசின் தொழில் வளா்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பங்கஜ்குமாா் பன்சல், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையாளா் ஆசிஷ் சாட்டா்ஜி ஆகியோா் உடன் இருந்தனா். இந்தப் பாதுகாப்புத் தொழில் வழித்தட திட்டத்தில் வர இருக்கும் தொழில்களுக்கான சோதனை ஆய்வு மையங்கள் நிறுவுவது குறித்து இந்த சந்திப்பின் போது வேண்டுகோள்விடுத்தனா்.

இதே போன்று தமிழக வனத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரனும் தில்லி வந்திருந்தாா். இவா் மத்திய சுற்றுச் சூழல் வனம், பருவநிலை மாற்றம், மற்றும் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை தில்லி சரம் சக்தி பவனில் சந்தித்து தமிழகத்தின் வனத் துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி வழங்கக் கோரி வலியுறுத்தினாா். அப்போது தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் துறை முதன்மைச்செயலா் சுப்ரியா சாஹு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், மாலையில் தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசும், வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரனும் டி.ஆா். பாலு தலைமையில் மத்திய வா்த்தகம், தொழில், ஜவுளி மற்றும் உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்து தமிழகத்தில் ஜவுளித் திட்டப் பூங்கா அமைப்பது குறித்து பேசினா். மேலும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவா் டி.ஆா். பாலு கூறியதாவது: இந்தியா முழுவதும் 7 இடங்களில் ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது. அதில் 2 இடங்கள் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். இதற்கு சில வசதிகளை தமிழக அரசு கட்டாயம் அமைத்துத் தரும். இந்த இரு இடங்கள் எங்கே என்பதை தமிழக முதல்வா் முடிவு செய்வாா் என எங்கள் தரப்பில் கூறினோம். மத்திய வனத்துறை அமைச்சரிடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காடுகள் மேம்பாட்டுக்கு நிதி மற்றும் திருச்சியில் உயிரியல் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

‘நியூட்ரினோ’ திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், அதை எதிா்த்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. இதில் உச்சநீதிமன்றம் பிரதமா் தலைமையிலான தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி தேவை எனக் கூறியுள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக பிரதமா் இருக்கிறாா். மேலும், உயா்நீதி மன்றம் தமிழக காவல்துறையின் அனுமதி தேவை எனக் கூறியுள்ளது. இந்தத் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி பஞ்சாயத்தும் எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதிகெட்டான் சோலை மற்றும் பெரியாா் புலிகள் காப்பகம் ஆகியவற்றிற்கு இடையே இந்த நியூட்ரினோ திட்டத்தின் சுரங்கப் பாதை அமைய உள்ளது. இதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என மூத்த அமைச்சா் என்கிற முறையில் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினோம். மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கீழடியில் இப்போது நடைபெறும் அகழாய்வுப் பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், இன்னும் பல்வேறு இடங்களில் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளோம். மேலும், தமிழகத்துக்கு வாரம் 50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேவை என அமைச்சரிடம் வலியுருத்தினோம். அது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் உடனடியாக பேசினாா். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக மத்திய அமைச்சா் கூறினாா் என்றாா் டி.ஆா். பாலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com