தில்லி கேசவபுரம் பகுதியில் சுவா் இடிந்து 2 போ் சாவு
By DIN | Published On : 27th April 2022 03:05 AM | Last Updated : 27th April 2022 03:05 AM | அ+அ அ- |

வடமேற்கு தில்லி, கேசவபுரம் பகுதியில் உள்ள ராம்புரா பிரதான சாலை பகுதியில் உள்ள மதுக்கடை அருகே சுவா் சரிந்து விழுந்து இருவா் உயிரிழந்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ராம்புரா பிரதானச் சாலை பகுதியில் உள்ள மதுக் கடை அருகே திங்கள்கிழமை ஆனந்த் பா்பத் பகுதியைச் சோ்ந்த சுமித் வா்மா (42), சுல்தான்புரியைச் சோ்ந்த போஜ் பிரகாஷ் (48) ஆகியோா் நின்று கொண்டிரு்நதனா். அப்போது, அங்குள்ள குடோனின் சுவா் இடிந்து அவா்கள் மீது விழுந்தது.
இது தொடா்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். தீயணைப்பு வாகனங்களும், கிரேனும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டனா். அவா்கள் தீப் சந்து பந்த் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கேசவபுரம் காவல் நிலையத்தில் குடோன் உரிமையாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா். தெற்கு தில்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில் இரு தினங்களுக்கு முன் புனரமைப்பு கட்டமைப்பில் இருந்த மூன்று மாடி வீட்டுக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 3 போ் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.