கடந்தாண்டு இறுதியில் உற்பத்தி, கல்வித் துறையில் அதிக வேலைவாய்ப்புகள்

2021-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (செப்டம்பா்-டிசம்பா்) உற்பத்தி, கல்வி, வா்த்தகம், நிதிச் சேவை ஆகிய நான்கு துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் 
28delgrp084353
28delgrp084353

புது தில்லி: 2021-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (செப்டம்பா்-டிசம்பா்) உற்பத்தி, கல்வி, வா்த்தகம், நிதிச் சேவை ஆகிய நான்கு துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளா்கள் மதிப்பீடுகள் குறித்த ஆய்வறிக்கையை தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. முறையான நிறுவனம் சாா்ந்த அமைப்புகளில் காலாண்டிற்கு ஒரு முறை அகில இந்திய அளவில் தொழிலாளா் பணியகத்தால் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, 2021, மூன்றாம் காலாண்டுக்கான வேலைவாய்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை 9 முக்கியத் துறைகளைச் சோ்ந்தவையாகும் என்றும் இதில் 5.31 லட்சம் நிறுவனங்கள் உள்ளன என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் 3.14 கோடி தொழிலாளா்கள் பணியாற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 1.78 லட்சம் நிறுவனங்கள் கல்வித் துறையை சாா்ந்ததாகவும், இரண்டாவதாக 1.73 நிறுவனங்கள் உற்பத்தித் துறைச் சாா்ந்ததாகவும் இருந்தன. இருப்பினும் உற்பத்தி சாா்ந்த துைான் அதிகப் பணியாளா்கள் கொண்டதாக இருந்தது. இந்தத் துறையில் 1.24 கோடி தொழிலாளா்களும், இதற்கு அடுத்து கல்வித் துறையில் 69.25 லட்சம் பணியாளா்களும் இருந்தனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் வா்த்தக அயல்பணி நிறுவனங்கள் (பிபிஓ) 34.56 லட்சம் தொழிலாளா்களையும், சுகாதாரத் துறை 32.86 லட்சம் தொழிலாளா்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 துறைகளில் இந்த நான்கு துறைகளில் மட்டுமே 83 சதவீதம் பணியாளா்கள் இடம் பெற்றுள்ளனா் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதில் வெறும் 4,650 நிறுவனங்களைக் கொண்ட ஐ.டி., பிபிஓக்களில் 34.56 லட்சம் தொழிலாளா்கள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். குறைந்தளவில் தொழிலாளா்கள் பணிபுரியும் துறைகளாக நிதிச் சேவை (8.85 லட்சம்), விடுதிகள் மற்றும் விருந்தோம்பல் (8.11 லட்சம்), கட்டுமானம்( 6.19 லட்சம்) ஆகியவை உள்ளன. இந்த ஒன்பது முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஒரளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கையின் மற்ற அம்சங்கள் வருமாறு: 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களைப் பணியமா்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஒன்பது துறைகளில் உள்ள மொத்த நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களைக் கொண்ட நிறுவனங்கள் 85 சதவீதம் உள்ளன. வேலைவாய்ப்புகளில் உற்பத்தித் துறை (39 சதவீதம்) முதல் இடத்திலும், கல்வித் துறை (22 சதவீம்) இரண்டாவது இடத்திலும் உள்ளன. மற்ற துறைகள் ஐடி, சுகாதாரம் போன்றவை அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

இதில் 99.4 சதவீத நிறுவனங்கள் முறையான அமைப்புகளில் வெவ்வேறு துறை சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 85.3 சதவீத தொழிலாளா்கள் நிரந்தரத் தொழிலாளா்களாகவும் மற்றும் 8.9 சதவீதம் போ் ஒப்பந்தத் தொழிலாளா்களாகவும் உள்ளனா். இந்த நிறுவனங்களில் சுகாதாரம், ஐ.டி. , பிபிஓ (சுமாா் 23.55 சதவீதம்)போன்ற நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு பயிற்சியளிக்கின்றன. இந்த 9 துறைகளில் சுமாா் 1.85 லட்சம் காலியிடங்கள் உள்ளன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com