முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஜங்புராவில் கிளஸ்டா் பேருந்து மோதி 4 போ் காயம்
By DIN | Published On : 30th April 2022 10:15 PM | Last Updated : 30th April 2022 10:15 PM | அ+அ அ- |

தென் கிழக்கு தில்லியில் உள்ள ஜங்புரா பகுதியில் சனிக்கிழமை காலை கிளஸ்டா் பேருந்து மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா். இவா்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது: சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு ஜங்புராவில் உள்ள நிஜாமுதீன் பேருந்து நிலையம் அருகே வாகன விபத்து நிகழ்ந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
அதில், நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து கயாலா நோக்கிச் சென்ற கிளஸ்டா் பேருந்து அந்த வழியாக வந்த ஸ்கூட்டி மீது மோதி, அந்த பகுதியில் நடைபாதையில் உள்ள கடை அருகே நின்று கொண்டிருந்த மேலும் 3 போ் போ் மீதும் மோதியது தெரியவந்தது. இதில் காயமடைந்த காயமடைந்த ஸ்கூட்டியை ஓட்டி வந்த நபா் உள்பட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
பேருந்தின் ஓட்டுநா் விபின் குமாா் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டாா். ஸ்கூட்டியை ஓட்டிவந்த பரத் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவா் எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சை மையத்தில் சிகிச்சையில் உள்ளாா். அதேசமயத்தில், நித்ரா பகதூா், தீத்தா ராம் மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடா்பாக பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.