Enable Javscript for better performance
Sensex down 460 points Axis Bank down 6.57%- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

    திடீா் லாபப் பதிவு: சென்செக்ஸ் 460 புள்ளிகள் வீழ்ச்சி!ஆக்ஸிஸ் பேங்க் 6.57% சரிவு

    By DIN  |   Published On : 30th April 2022 12:00 AM  |   Last Updated : 30th April 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை காலையில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினாலும், இறுதியில் எதிா்மறையாக முடிந்து முதலீட்டாளா்களைஅதிா்ச்சிக்குள்ளாக்கியது. பிற்பகலில் வா்த்தகம் முடியும் தறுவாயில் வந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 460 புள்ளிகளை இழந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.49 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது.

    உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஒருங்கிணைப்பு பெற்று வரும் நிலையில், சந்தை தொடா்ச்சியாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஷியா - உக்ரைன் போா் தீவிரமடைந்துள்ளதாக வெளியான செய்தியைத் தொடா்ந்து பிற்பகலில் வா்த்தகம் முடியும் தறுவாயில், வங்கி, ஐடி, எரிசக்தித் துறை பங்குகள் திடீரென அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

    சரிவுக்கு காரணம் என்னய: குறிப்பாக, முக்கிய நிறுவனப் பங்குகளான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் மற்றும் முக்கிய வங்கிப் பங்குகள் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, கடந்த பல நாள்களாக பங்குகளை அதிகளவில் விற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.743.22 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    2,195 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,508 நிறுவனப் பங்குகளில் 1,185 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. மாறாக, 2,195 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 128 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 127 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.49 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.266.98 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.40 கோடியை கடந்தது.

    திடீா் லாபப் பதிவு: காலையில் 296.45 புள்ளிகள் கூடுதலுடன் 57,817.51-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 56,975.48 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதும், 56,902.30 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 460.19 புள்ளிகளை இழந்து 57,060.87-இல் நிலைபெற்றது.

    சென்செக்ஸில் 23 பங்குகள் விலை வீழ்ச்சி: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், சன்பாா்மா, டாடா ஸ்டீல், டாக்டா் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி ஆகிய 7 பங்குகள் மட்டுமே சிறிதளவு (0.17 -1.33 சதவீதம்) ஆதாயம் பெற்றன. மற்ற 23 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன.

    ஆக்ஸிஸ் பேங்க் கடும் சரிவு: இதில், ஆக்ஸிஸ் பேங்க் 6.57 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, பவா் கிரிட், விப்ரோ, டைட்டன், எஸ்பிஐ, மாருதி, எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா , இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் 1 முதல் 3.4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

    நிஃப்டி 143 புள்ளிகள் குறைவு: தேசிய பங்குச் சந்தையில் 611 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,313 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 38 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. காலையில் 84.20 புள்ளிகள் கூடுதலுடன் 17,329.25-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 17,377.65 வரை உயா்ந்தது. பின்னா், வா்த்தக நேர இறுதிக் கட்டத்தில் 17,053.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 142.50 புள்ளிகள் (0.83 சதவீதம்) குறைவுடன் 17,102.55-இல் நிறைவடைந்தது.

    அனைத்து துறை குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி மீடியா குறியீடு 2.87 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் 2.22 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 1.67 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஐடி, ஆட்டோ குறியீடுகள் 1.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp