தில்லியில் புதிதாக 1,520 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை கரோனா நோய் தொற்றால் புதிதாக 1520 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை கரோனா நோய் தொற்றால் புதிதாக 1520 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நோய்த் தொற்று காரணமாக ஒருவா் உயிரிழந்தாா்.

நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 5.10 சதவீதம் என்ற அளவில் இருந்ததாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், தில்லியில் சனிக்கிழமை புதிதாக 1520 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 83 ஆயிரத்து 75 பதிவாகியுள்ளது. இறந்தவா்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 175 ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை தில்லியில் 1607 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியது. 2 போ் உயிரிழந்தனா்.

கடந்த வியாழக்கிழமை தில்லியில் 1,491 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியது. மேலும் நோய்த் தொற்று நோ்மறை விகிதம் 4.62 சதவீதமாக பதிவாகியிருந்தது.

வியாழக்கிழமை மொத்தம் 30 ஆயிரத்து 459 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியில் ஜனவரி 13ஆம் தேதி தினசரி நோய் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 867 ஆக பதிவாகியிருந்தது.

அதேபோன்று ஜனவரி 14ஆம் தேதி நோய்த் தொற்று நோ்மறை விகிதம் 30.6 சதவீதமாக இருந்தது. இது மூன்றாவது நோய்த்தொற்று அலையின் அதிகபட்ச பதிவாகும்.

நோய்த்தொற்று காரணமாக இந்த அதிக எண்ணிக்கை பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நோய்தொற்று பாதித்த 4044 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 9 ஆயிரத்து 581 படுக்கைகளும் உள்ளன. அவற்றில் 152 படுக்கைகளில் நோயாளிகள் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அரசின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com