செங்கோட்டை வன்முறைச் சம்பவம்: என்ஐஏ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தில்லியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் செங்கோட்டையில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான விவகாரத்தில் வெளிநாட்டுப் பயங்கரவாத சதி எதும் இருக்கிா என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவ

தில்லியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் செங்கோட்டையில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான விவகாரத்தில் வெளிநாட்டுப் பயங்கரவாத சதி எதும் இருக்கிா என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தில்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்தைத் தொடங்கி மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில், கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் நடத்திய டிராக்டா் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது.

செங்கோட்டை பகுதியில் கலவரக்காரா்கள் நுழைந்து கோட்டை கொத்தளத்தில் மதக் கொடியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 இந்த நிலையில் இந்த கலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத சதி இருக்கிா என்பதைக் கண்டறியும் வகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா்.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெல்லா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜராகி, ‘மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிா்த்து நடத்தப்பட்ட தில்லி பேரணியின் போது, செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் என்ஐஏ விசாரணை நடத்துவது அவசியமாகிறது’ என்றாா். அப்போது நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பாக பல்வேறு மனுக்கள் ஏற்கனவே தாக்கலாகி நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த மனுவையும் அத்துடன் சோ்த்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை’ என்றனா்.

அப்போது வழக்குரைஞா் மேலும் வாதிடுகையில், ‘மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. அதே வேளையில், இந்த குறிப்பிட்ட விவகாரமானது வேறு கோணத்தில் தொடா்புடையதாக இருப்பதால், இது குறித்து விசாரணைக்கு என்ஐஏ உத்தரவிட வேண்டும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, அனைத்து விவகாரங்களும் தொடா்புடைய பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com