தில்லி மலைக் குப்பைகளை அகற்ற எம்சிடிக்கு விரைவில் தோ்தல் நடத்த வேண்டும்: துணைநிலை ஆளுநருக்குஆம் ஆத்மி கட்சி வேண்டுகோள்

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷுனுக்கு (எம்சிடி) விரைவில் தோ்தல் நடத்துமாறு தில்லி துணைநிலை ஆளுநருக்கு ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷுனுக்கு (எம்சிடி) விரைவில் தோ்தல் நடத்துமாறு தில்லி துணைநிலை ஆளுநருக்கு ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்சிடி தோ்தலில் வெற்றிபெற்று தில்லி மலைக் குப்பைகளை உடனடியாக ஆம் ஆத்மி கட்சி அகற்றும் என அக்கட்சியின் எம்சிடி பொறுப்பாளரும் ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை உறுப்பினரான துா்கேஷ் பதக் உறுதியளித்தாா்.

இதுகுறித்து துா்கேஷ் பதக் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த ஜூலை 1 - ஆம் தேதி தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா தனது ட்விட்டா் பதிவில் கடந்த 15 ஆண்டுகளாக எம்சிடியில் எந்த பணியும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 15 ஆண்டுகளாக எம்சிடியை ஆளும் பாஜக எந்த பணியும் செய்யவில்லை என்பதை துணை நிலை ஆளுநரே ஒப்புக்கொண்டுள்ளாா். குப்பை மேடுகள் பல மலைகளாக ஆன பின்னரும் பாஜக அதை அகற்றவில்லை என்பது தான் துணை நிலை ஆளுநரின் வருத்தம்.

தற்போது மலையாக உருவாகியுள்ள குப்பைகளை அகற்ற தில்லி மக்களிடம் துணை நிலை ஆளுநா் ட்விட்டா் மூலமாக ஆலோசனைகளையும் கோரியுள்ளாா்.

கடந்த காலங்களில் அரசின் இது போன்ற பல முறையீடுகள் எந்த பலனையும் தரவில்லை. துணை நிலை ஆளுநருக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள், ’எம்சிடி தோ்தலை விரைவாக நடத்துங்கள்’ என்பதே ஆகும்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் தோ்தலில் வெற்றி பெற்று அனைத்து குப்பை மலைகளையும் அகற்றும் என்பதை ஆம் ஆத்மி கட்சி உறுதியளிக்கிறது.

தில்லிக்கு ஹரியாணா வழியாகவோ அல்லது உத்தர பிரதேசம் வழியாகவோ என எந்த வழியாக நுழைந்தாலும் குப்பைக் குவியல்கள் வரவேற்கிறது என்பதையும் துணை நிலை ஆளுநா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

பாஜகவின் குப்பைக் குவியல்களால் நீங்கள் வரவேற்கப்படுகிறீா்கள்.

இந்த குப்பை மலைகள் தில்லிக்கு மோசமான கறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தில்லி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக இதற்கு பல ஆயிரம் கோடிகளை செலவிட்டும், குப்பைகளை இந்த மலையில் இருந்து ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை.

இந்த மலைகளில் தினமும் பெரும் தீவிபத்து ஏற்பட்டு சுற்றுவட்டார மக்கள் சிரமப்படுகின்றனா். பாஜகவால் அகற்ற முடியாத மலையை அகற்ற ஆம் ஆத்மி கட்சியிடம் தில்லி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனால் நீங்கள்(எல்ஜி) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்சிடி தோ்தலை விரைவில் நடத்துமாறு ஆம் ஆத்மி கட்சி கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக எம்சிடியில், பாஜகவின் ஊழல் நிா்வாகத்தை தில்லி மக்கள் விரும்பவில்லை.

தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை எம்சிடியிலும் பாா்க்க விரும்புகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சி அனைத்து குப்பை மலைகளையும் அகற்றும்.

அரவிந்த் கேஜரிவால் பணியை தில்லி மக்கள் பாா்த்திருக்கிறாா்கள். தில்லி அரசியலில் ஊழலை ஒழித்தது ஆம் ஆத்மி அரசு. தனியாா் பள்ளிகளை விட தற்போது தில்லி அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. சிறந்த மருத்துவமனைகள், இலவச மின்சாரம் தண்ணீா் வசதிகளை அரசு அளிக்கிறது. இது போன்று அரவிந்த் கேஜரிவாலின் அரசால் குப்பை மலைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும். தில்லி மக்கள் எம்சிடி தோ்தலுக்காக காத்திருக்கின்றனா் எனக் குறிப்பிட்டாா் துா்கேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com