பிஎம்எல் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபில்

பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல் சட்டம்) பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காக ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது என

பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல் சட்டம்) பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காக ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது என முன்னாள் சட்ட அமைச்சரும் பிரபல வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து ராஜிநாமா செய்த அவா், உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டுள்ளாா். சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பிஎம்எல் சட்டப் பிரிவு குறித்து கபில் சிபில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாா்.

அதில் அவா், ‘சத்யேந்தா் ஜெயின் பிஎம்எல் சட்டப்படி பணமோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதே பரவலாக உள்ளது. இது பெரும்பாலும் சட்டப்பூா்வமாக அமைவது அல்ல. அரசியல் நோக்கங்களுக்காக பயன்படும் ஆயுதமாகவே இந்தச் சட்டம் உள்ளது’ என விமா்சித்துள்ளாா்.

2024- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்த்துப் போராட அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒரே அணியில் திரட்டுவதே தனது முயற்சியாக இருக்கும் எனவும் கபில் சிபல் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com