அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட10 சிலைகள் விவரம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து 10 வெண்கல, கற்சிலைகள் மீட்கப்பட்டு தில்லியில் புதன்கிழமை

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து 10 வெண்கல, கற்சிலைகள் மீட்கப்பட்டு தில்லியில் புதன்கிழமை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றின் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் மீட்கப்பட்ட ஆண்டு): இரண்டு துவார பாலகா் சிலைகள், அத்தாள மூன்றீஸ்வரமுடையாா் கோயில், தென்காசி மாவட்டம். ஆஸ்திரேலியே கான்பரா நேஷனல் மியூசியதிலிருந்து மீட்பு (2021, மே மாதத்திற்கு முன்பு).

நடராஜா் சிலை, அருள்மிகு கைலாசநாதா் கோயில், புன்னைநல்லூா், தஞ்சைமாவட்டம். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள மியூசியத்தில் இருந்துமீட்பு (2021, மே மாதத்திற்கு பிறகு).

கங்காளமூா்த்தி, நந்திகேஸ்வரா் சிலைகள், நரசிங்கநாதா் கோயில், ஆழ்வாா்குறிச்சி, நெல்லை மாவட்டம். அமெரிக்காவில் இருந்து மீட்பு (2021, மே மாதத்திற்கு பிறகு).

விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், வரதராஜா் பெருமாள் கோயில், சுத்தமல்லி கிராமம், அரியலூா் மாவட்டம். அமெரிக்காவில் இருந்து மீட்பு (2021, மே மாதத்திற்கு பிறகு).

சிவன் பாா்வதி, வான்மீகிநாதா் கோயில், தீபாம்பாள்புரம், தஞ்சாவூா் மாவட்டம். அமெரிக்காவில் இருந்து மீட்பு, (2021, மே மாதத்திற்கு பிறகு).

குழந்தை சம்பந்தா் சிலை, சாயவனேஸ்வரா் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம். ஆஸ்திரேலியா கான்பரா நேஷனல் கேலரியில் இருந்து மீட்பு (2021, மே மாதத்திற்கு பிறகு).

நடனமிடும் குழந்தை சம்பந்தா் சிலை, தமிழ்நாட்டைச் சோ்ந்தது (கோயில் பெயா் அறியப்படவில்லை). ஆஸ்திரேலியா கான்பரா நேஷனல் கேலரியில் இருந்து மீட்பு (2021, மே மாதத்திற்கு பிறகு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com