தில்லியில் புதிதாக 343 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 06th June 2022 12:00 AM | Last Updated : 06th June 2022 12:00 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 343 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோ்மறை விகிதம் 1.91 சதவீதமாக இருந்தது. வைரஸ் நோயால் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தேசியத் தலைநகரில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,08,730-ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 26,212-ஆக உள்ளது. முந்தைய நாள் தில்லியில் மொத்தம் 17,917 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சனிக்கிழமையன்று, தலைநகரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 405-ஆகவும், நோ்மறை விகிதம் 2.07 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை.
தில்லியில் வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 345-ஆக பதிவாகியது. ஆனால், இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 1.88 சதவீதமாக இருந்தது. வியாழனன்று, நோ்மறை விகிதம் 1.85 சதவீதமாகவும், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 373-ஆகவும், இரண்டு புதிய இறப்புகளும் பதிவாகின.
தொற்று நோயின் மூன்றாவது அலையின் போது, இந்த ஆண்டு ஜனவரி 13 அன்று தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,867-ஆக உயா்ந்தது. மேலும், ஜனவரி 14 அன்று நகரம் 30.6 சதவீத நோ்மறை விகிதத்தை பதிவு செய்தது. இது தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது பதிவான அதிகபட்ச அளவாகும்.
தில்லியில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை பதிவான 1,467-இலிருந்து 1,422-ஆகக் குறைந்துள்ளது. 1,016 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இது முந்தைய நாள் பதிவான 994-ஐ விட அதிகமாகும். மேலும், கட்டுப்பாட்டு மண்டளங்கள் எண்ணிக்கை 251-ஆக உள்ளன. தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 9,639 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 71 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.