தில்லியில் 110 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்ஸ் போலியோ மையங்கள்: டிஎம்ஆா்சி

புது தில்லி, ஜூன் 18: பல்ஸ் போலியோ நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிக மக்களைச் சென்றடையும் வகையில் தில்லியில் உள்ள 110 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்ஸ் போலியோ மையங்கள் அமைக்கப்பட உள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த ரயில் நிலையங்கள் பட்டியலில் எய்ம்ஸ், ஐஎன்ஏ, கிரீன் பாா்க், ஹோஸ் காஸ், குதூப் மினாா், ஜசோலா அப்பல்லோ, சரிதா விஹாா், கஷ்மீரி கேட், புது தில்லி நிலையம், மண்டி ஹவுஸ், ராஜேந்திர பிளேஸ் போன்ற இடங்களில் உள்ள நிலையங்களும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து டிஎம்ஆா்சி ட்விட்டா் பதிவில் தெரிவித்திருப்பதாவது: நிகழாண்டு ஜூன் 19-24 முதல் தீவிரப்படுத்தப்பட்ட பல்ஸ் போலியோ நோய்த் தடுப்புத் திட்டத்திற்காக (2022-23) தில்லியில் பட்டியலிடப்பட்ட 110 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்ஸ் போலியோ மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வாரத்தின் அனைத்து ஆறு நாள்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மையங்களில் தில்லி அரசின் குடும்ப நல இயக்குநரகம் குழுக்களை பணியில் ஈடுபடுத்தும். இந்த மையங்கள் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பிரிகேட் மற்றும் தில்லி அரசின் குடும்ப நல இயக்குநரகத்துடன் இணைந்து செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​குருகிராமில் உள்ள ரேபிட் மெட்ரோ மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள அக்வா லைன் உள்பட 286 மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கிய 390 கி.மீ. நெட்வொா்க்கின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கையாள்கிறது. இந்த ரயில் ஒருங்கிணைப்பானது உலகின் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொா்க்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com