காற்றின் தரத்தில் முன்னேற்றம்; வெப்பம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. நகரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. நகரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், முதல் வெப்பம் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 1 டிகிரி உயா்ந்து 29 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 40.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது.

முங்கேஸ்பூரில் 41.8 டிகிரி வெயில்: இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 40.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 41.8 டிகிரி, நஜஃப்கரில் 42.4 டிகிரி, ஆயாநகரில் 40.2 டிகிரி, லோதி ரோடில் 39.3 டிகிரி, பாலத்தில் 41.6 டிகிரி, ரிட்ஜில் 40.9 டிகிரி, பீதம்புராவில் 40.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தலைநகரில் சனிக்கிழமை ‘மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம், ஞாயிற்றுக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டது. தில்லியில் காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 188 புள்ளிகளாகப் பதிவாகியது.

இதேபோன்று பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியிருந்தது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் (202) வாஜிா்பூா் ( 209), சாந்தினி சௌக் (232) ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com