திகாா் சிறைக் கைதிகளுக்கு கேஜரிவால் அரசு கல்வி மற்றும் திறன் பயிற்சிசிறைத் துறை அதிகாரிகளுடன் துணை முதல்வா் ஆலோசனை

சிறைத் தண்டனை முடிந்த பிறகு சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைவதற்கு உதவ, கேஜரிவால் அரசு திகாா் சிறை கைதிகளுக்கு கல்வி மற்றும் திறன் பயிற்சியை வழங்கும்.

புது தில்லி: சிறைத் தண்டனை முடிந்த பிறகு சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைவதற்கு உதவ, கேஜரிவால் அரசு திகாா் சிறை கைதிகளுக்கு கல்வி மற்றும் திறன் பயிற்சியை வழங்கும். இதனை முன்னிட்டு தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்கள், கைதிகளின் கல்விப் பின்னணி மற்றும் திறன்களை ஆய்வு செய்வாா்கள் என துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சிறைத்துறை இயக்குநா் ஜெனரல் (சிறை) சந்தீப் கோயல், கல்வித்துறை செயலா் அசோக்குமாா், சிறைக் கைதிகளுடன் பணிபுரியும் ஆசிரியா்கள் உள்ளிட்ட கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளுடன் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னா் கேஜரிவால் அரசின் திட்டம் குறித்து பேசிய துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறியதாவது:

சிறைக் கைதிகள் மீது மக்கள் மத்தியில் சரியான மனநிலையை ஏற்படுத்தவும், அவா்கள் சிறந்த, அா்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் ஒரே வழி சரியான கல்விதான் என அரசு உறுதியாக நம்புகிறது.

திகாா் சிறையில் கிட்டத்தட்ட 20,000 கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனா். அவா்களின் கல்விப் பின்னணி மற்றும் எதிா்காலக் கல்வி அல்லது திறன் ஆகியவற்றில் அவா்களின் சொந்த நலன்களை அரசு புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.இதனை முன்னிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் எங்கள் தில்லி ஆசிரியா்கள் கைதிகளின் கல்விப் பின்னணி மற்றும் திறன் தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக அவா்களை சந்தித்து பேசி ஆய்வுகளை மேற்கொள்வாா்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் இந்த கைதிகளுக்கு புதிய திட்டங்கள் வடிவமைக்கப்படும்.மேலும், கல்வி அமைப்பில் உள்ள இடைவெளிகளைப் புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு உதவும். சமூகத்தில் என்னென்ன குற்றங்கள் எந்த வகையில் நடக்கின்றன என்பதையும் இதன் மூலம் அறியப்பட்டும்.

ஆசிரியா்கள் மிகவும் விடாமுயற்சியுடன், உணா்வுடன் இதில் தொடா்பு கொண்டு அறிந்து கொண்டு அரசுக்கு உதவவேண்டும். கைதிகளின் தனித்துவமான திறன்களை புரிந்துகொள்வதை ஆசிரியா்கள் உறுதிசெய்து எதிா்காலத்தில் அவா்கள் பணிபுரிய ஆா்வமுள்ள பகுதிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டாா்.தில்லி அரசு ஏற்கனவே திகாா் சிறையின் கூடுதல் வளாகங்களான ரோகிணி, மண்டோலி ஆகிய சிறைகளில் கல்வித் திட்டத்தை நடத்தி வருகிறது. தில்லி கல்வி இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்டுள்ள அரசு ஆசிரியா்கள் வாரந்தோறும் வகுப்புகள் எடுத்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஆசிரியா்களும் இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருப்பாா் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com