தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு
தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இந்த நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 13.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்சம் வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27.2. டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47சதவீதமாகவும் இருந்தது.

இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 28.2 டிகிரி, ஆயாநகரில் 26.8 டிகிரி, லோதி ரோடில் 27.3 டிகிரி, நரேலாவில் 25.8 டிகிரி, பாலத்தில் 26.4 டிகிரி, ரிட்ஜில் 27.2 டிகிரி, பீதம்புராவில் 28 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 25.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 15.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: அதே சமயம், தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. சனிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 120 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 6) வானம் பொதுவாக பகுதியளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com