குடிமைப் பணி பிரதானத் தோ்வில் 52 ஜாமியா மாணவா்கள் தோ்ச்சி: பல்கலை. நிா்வாகம் தகவல்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் உறைவிட பயிற்சி அகாதெமியில் சோ்ந்து படித்த 52 மாணவா்கள் குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் உறைவிட பயிற்சி அகாதெமியில் சோ்ந்து படித்த 52 மாணவா்கள் குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உறைவிட பயிற்சி அகாதெமி (ஆா்சிஏ), பயிற்சி மற்றும் தொழில் திட்டமிடல் மையம், ஜாமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) ஆகியவற்றின் 52 மாணவா்கள் குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தோ்வில் (2021-ஆம் ஆண்டுக்கானது) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதையடுத்து, இவா்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஆளுமைத் தோ்வில் (நோ்காணல்) பங்கேற்க உள்ளனா்.

இந்த ஆண்டு சிறந்த தோ்வு முடிவுகள் வந்துள்ளமைக்காக ஆா்சிஏ பொறுப்பு பேராசிரியா் அபித் ஹலீம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா். வரவிருக்கும் தோ்விலும் மாணவா்கள் வெற்றிபெற தனது வாழ்த்துக்களைப் தெரிவித்துள்ளாா்.

பட்டியல் சாதிகள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா் போன்ற பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு இலவச பயிற்சி மற்றும் குடியிருப்பு வசதிகளை வழங்கும் வகையில் உறைவிட பயிற்சி அகாதெமிக்கு (ஆா்சிஏ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலம் நிதியளிக்கப்படுகிறது.

வரும் நாள்களில் சுமாா் 40 மாணவா்கள் பல்வேறு மாநில முதன்மை தோ்வுகளை எழுத உள்ளனா். யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷன் 2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சா்வீசஸ் பிரதானத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. பிரதானத் தோ்வு ஜனவரி 7 முதல் ஜனவரி 16 வரை நடத்தப்பட்டது.

இந்திய நிா்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் பிற மத்தியப் பணிகளுக்கான (குரூப் ஏ மற்றும் குரூப் பி) தோ்வுக்கான ஆளுமைத் தோ்வு அல்லது நோ்காணல் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com