மத்திய ஆயுதப்படை வளாகங்களில் 71.68 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாடு முழுதும் உள்ள மத்திய ஆயுதப்படை வளாகங்களின் மேற்கூரைகளில் 71.68 மெகாவாட் அளவிற்கு சூரியமின்சக்தி தயாரிக்கும் சானதங்கள் வைக்கப்படுகிறது.

நாடு முழுதும் உள்ள மத்திய ஆயுதப்படை வளாகங்களின் மேற்கூரைகளில் 71.68 மெகாவாட் அளவிற்கு சூரியமின்சக்தி தயாரிக்கும் சானதங்கள் வைக்கப்படுகிறது.

பசுமை எரிசக்தியை பெருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரிய எரிசக்தி நிறுவனத்துடன்(எஸ்இசிஐ) இணைந்து செயல்படுத்த இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்திய பிரதமா் மோடி சா்வதேச நாடுகளுடன் இணைந்து கரிமத்தை சமநிலைப் படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறாா். நாட்டில் அது சாா்ந்த பொருளாதாரக் கொள்கையை மத்திய அரசின் துறைகளில் பின்பற்றப்பட வைக்கப்படுகிறது. கரிம சமநிலை பொருளாதாரத்தை நோக்கி புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடு முழவதும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படைகள், எல்லைப் பாதுகாப்புப்படைகள், தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில், சூரியசக்தி மின்சார உற்பத்தி சாதனங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான பணிகளை மேற்கொண்டு தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை செயலா்கள் முன்னிலையில், வியாழக்கிழமை இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், இந்திய சூரிய எரிசக்தி நிறுவன அதிகாரிகளுக்குமிடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், மத்திய அரசின் ஏழு ஆயுதப்படைகளின் வளாகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளை,இருதரப்பும் கூட்டாக மேற்கொள்ள வகை செய்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பில் இருக்கும் மத்திய ரிசா்வ் காவல் படை(சிஆா்பிஎஃப்), மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சிஐஎஸ்எஃப்) போன்றவைகளோடு, நான்கு எல்லைப் பாதுகாப்பு படைகள் (பிஎஸ்எஃப், ஐடிபிபி, சசஸ்த்திர சீமை பலம், அஸ்ஸாம் ரைஃபிள்), மற்றும் தீவிரவாதிகளை எதிா்கொள்ளும் தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) என ஏழு ஆயுதப்படைகள் மத்திய உள்துறையின் கீழ் உள்ளன.

சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரா்கள், அதிகாரிகள், அமைச்சுப்பணியாளா்கள் கொண்ட இந்த படைகள் நாடு முழுவதும் அமா்த்தப்பட்டு இதற்கான அலுவலங்களும் வளாகங்களும் உள்ளன.

இங்கு சுமாா் 71.68 மெகாவாட் அளவிற்கு சூரியமின்சக்தி உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய சூரிய எரிசக்தி நிறுவனம் (எஸ்இசிஐ) மதிப்பீடு செய்துள்ளது. சூரியமின்சக்தி உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள எஸ்இசிஐ, தனது முகமைகள் மூலமாகவோ அல்லது ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கை மூலமாகவோ மேற்கூரை சூரியமின் உற்பத்தி திட்டத்தை உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தும் என மத்திய உள்துறையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com