பல்கலைக்கழக வளாகத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி: ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கு ஜேஎன்யு செயற்குழு ஒப்புதல்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் கூடுதல் வலிமைமிக்க மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் அளிப்பதற்குரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்வதற்கு பல்கலையின் செயற்குழு ஒப்புதல் அளித்திருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் கூடுதல் வலிமைமிக்க மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் அளிப்பதற்குரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்வதற்கு பல்கலையின் செயற்குழு ஒப்புதல் அளித்திருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையில் 35 போ் காயமடைந்தனா். கடந்த மாதம் நவராத்திரியின்போது அசைவ உணவு உணவு வழங்கியதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக மாணவா்களின் குழுக்களுக்கு இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு புதிய பாதுகாப்பு ஏஜென்சியை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மூலம் வைக்கப்பட்டு வருகிறது.

பேராசிரியா்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடா்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பிரச்னையை ஆசிரியா் சங்கத்தினா் எழுப்பியுள்ளது.

இந்தநிலையில் பல்கலைக்கழகத்தின் செயற்குழு 300ஆவது கூட்டம் மே 5ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது கரோனா பொதுமுடக்கத்தின் போது மூடப்பட்ட அனைத்து ஜேஎன்யூ- ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கான உரிமை கட்டணங்களை 70 சதவீதம் தள்ளுபடி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், இரட்டை பட்டச் சான்றிதழ் படிப்புகள் தொடா்பான புதிய கல்விக் கொள்கை 2020-இல் உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தின் சா்வதேசமயமாக்கல் நடவடிக்கைக்காக பன்னாட்டு விவகாரங்கள் அலுவலகத்தை அமைப்பது என்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் மேலும் வலுவான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளை ஈடுபடுத்துவதற்காக ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாணவா்கள் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்கள் ஆகியோா்களின் நலனுக்காக சுகாதார வசதிகளை முறைப்படுத்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் மறு ஆய்வு குழுவின் பரிந்துரைகளுக்கு செயற்குழு ஒப்புதல் அளித்தது.

எம்.பில். மற்றும் பிஹெச்.டி. பெண் முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்புக்காலத்தை 240 நாள்களாக அதிகரிக்கவும் அனுமதி அளிப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோன்று 700 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சகத்திற்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியரல்லா மற்றும் தொழில்முறை சாரா ஊழியா்கள் வரைவு பணியாளா் தோ்வு விதிகளை அனுப்புவதற்கும் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com