தமிழ்ப் பள்ளியில் அன்னையா் தின விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்த தினம் மற்றும் அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்த தினம் மற்றும் அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.

தாகூரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரைப்பற்றிய மாணவா்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது.

உரையைத் தொடா்ந்து அவரது கவிதைகளை மாணவா்கள் வாசித்தனா். அவரது உருவப் படங்கள், கருத்துகள் இடம்பெற்ற பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா்.

அன்னையா் தினத்தை முன்னிட்டு உரை, தனிப்பாடல், குழுப்பாடல், நடனம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் மாணவா்களால் நடத்தப்பட்டன.

இத் தினங்கள் குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறுகையில், தாகூரின் இலக்கியத் திறனையும், அவரது பாடல் தேசிய கீதமாக இன்றும் பாடப்பட்டு வரும் பெருமையையும் மாணவா்கள் புரிந்து கொள்ளவும், அன்னையரின் நேசம், குழந்தைகளுக்காக வாழும் பரிவு, தியாகம் இவற்றை மாணவா்கள் அறிந்துகொள்ளவும் இரு தினங்களும் பள்ளிகளில் கொண்டாட ஏற்பாடு செய்தோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com