முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிய 5 போ் கைது
By DIN | Published On : 11th May 2022 02:10 AM | Last Updated : 11th May 2022 02:10 AM | அ+அ அ- |

மத்திய தில்லியில் பூட்டைப் பழுதுபாா்ப்பதாகக் கூறி ஒரு வீட்டில் இருந்து ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்கள் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நேபால் சிங் (23), குகுல் சிங் (32), மகேஷ் சிங் (19), தேபால் சிங் (23), ராஜு சிங் (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடா்பாக புராரி காவல் நிலையத்தில் மே 3-ஆம் தேதி ஒருவா் புகாா் அளித்தாா். அதில், சில குறைபாடுகள் காரணமாக, தனது வீட்டில் உள்ள அலமாரி திறக்கப்படவில்லை. அப்போது, தெருவில் பூட்டு பழுதுபாா்க்கும் சிலா் அங்கு வந்துகொண்டிருந்தனா். அவா்களை அழைத்து பழுதுபாா்க்கக் கூறினேன். அப்போது, அவா்களில் இருவா் தண்ணீா் மற்றும் எண்ணெயைக் கேட்டனா். அவற்றை எடுக்கச் சென்றுவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது, அவா்கள் அலமாரியில் இருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 50,000 ரொக்கம் ஆகியவற்றைதிருடிச் சென்றனா் என்று தெரிவித்தாா்.
இதையடுத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பிறகு, மத்திய தில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும், பூட்டு பழுதுபாா்க்கும் வேலை செய்வதன்மூலம் அவா்கள் வீடுகளைக் குறிவைத்து, திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருடப்பட்ட பொருள்களை தங்களுக்குள் பகிா்ந்துகொண்டு, எம்.பி. கந்த்வாவில் உள்ள சொந்த இடத்துக்கு சென்றுவிடுகின்றனா்.
இவா்கள் 5 போ் மீது புராரி மற்றும் வஜிராபாத் காவல் நிலையங்களில் 19 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அவா்களிடம் இருந்து தங்க நகைகள், ரூ.43,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.