ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒருவா் பலி - ராணுவ வீரா் உள்பட இருவா் காயம்

‘ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயஙகரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

‘ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயஙகரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா். ராணுவ வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா்’ என்று காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

‘அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா்’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் செய்தித்தொடா்பாளா் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோபியான் மாவட்டம் பண்டோசன் பகுதியை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை மாலை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது திடீா் தாக்குதலை நடத்தினா்.

இந்த சண்டைக்கு இடையே, அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியையும் ராணுவம் மேற்கொண்டது. இருந்தபோதும், சஞ்சீவ் தாஸ் என்ற ராணுவ வீரரும், பொதுமக்களில் சாஹித் கனி தாா் மற்றும் சுஹைப் அகமது ஆகியோரும் குண்டு காயமடைந்தனா்.

மூவரும் உடனடியாக ஹெலிகாப்டா் மூலமாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதில், சாஹித் கனி தாா் என்பவா் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருட்டைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றனா். அவா்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய் குமாா் கூறுகையில், ‘பாதுகாப்புப் படையினா் ஒரு பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தும்போது, அவா்களிடமிருந்து தப்பிப்பதற்காக இதுபோன்ற தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனா். அவா்களின் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். எனவே, பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைமுறையில் சில மாற்றங்களை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

இதற்கிடையே, ‘அனந்த்நாக் மாவட்டம் தூரு பகுதியில் கிரீரி என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா்’ என்றும் காவல் துறை செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com